எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி, திராவிட மாடல் 2.O ஆட்சியில் இன்னும் அதிக திட்டங்களை முதல்வர் செயல்படுத்துவார் என்றும், நீங்கள் தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டம் இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு துறைகள் மூலம் 7,127 பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ரூ.6.02 கோடி மதிப்பீட்டில் 32 முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா, ரூ.55.93 கோடி மதிப்பீட்டில் 185 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த விழாவில் மகளிர் அதிகமாக பங்கேற்றுள்ளீர்கள். உங்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே திராவிட மாடல் வெற்றிக்கு சாட்சியாக உள்ளது. இந்தியாவிலேயே மகளிர் முன்னேற்றதுக்காக தமிழக முதல்வர் பல முன் மாதிரி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் மகளிர் விடியல் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் 12 கோடி பயணங்களை மகளிர் மேள்கொண்டுள்ளனர்.
காலையில் தாய்மார்கள் சமையல் செய்து, பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப சிரமப்படக் கூடாது என்பதற்காக பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கொண்டுவந்தார். தென்காசி மாவட்டத்தில் 12 ஆயிரம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரம் மாணவிகள் பயனடைகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை தமிழக முதல்வர் வழங்கினார். இத்திட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் 4,000 பேர் பயனடைந்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் 1.31 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 3.30 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெறுகின்றனர். தேர்தலை காரணம் காட்டி இத்திட்டத்தை நிறுத்த சில பேர் முயற்சி செய்தனர். ஆனால் தமிழக முதல்வர் அதனை முறியடித்து, 1.31 லட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாயை முதல்வர் வழங்கினார்.
மேலும், கோடை கால சிறப்பு நிதியாக விளிம்பு நிலையில் உள்ள முதியோர், கைம் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2,000 வழங்கினார். இத்திட்டத்தில் 38 லட்சம் பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். ரூ.300 கோடி மதிப்பில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முற்போக்கான திட்டங்களால் இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. 11.19 சதவீத வளர்ச்சியுடன் சிறப்பான இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக மகளிர் சுய உதவி குழுக்களை ஆரம்பித்தவர் முள்ளாள் முதல்வர் கருணாநிதி. ஆரம்பத்தில் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் இணைப்பு பெற்று, அதை குடும்ப தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தீர்கள். இப்போது, கடனுதவி வழங்கி உங்களை தொழில் முனைவோராக மாற்றியுள்ளார் தமிழக முதல்வர். மகளிர் குழுக்களுக்கு அடையாள அட்டை புகைப் படத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
சுய உதவி குழுவினர் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை 100 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி பேருந்துகளில் எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம். கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடனுதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி, பெரிய தொழில்முனைவோராகி மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு உங்கள் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
அரசு அலுவலகங்களை தேடி பட்டா வாங்க காத்திருந்த நிலை மாறி அரசே உங்களை தேடி வந்து பட்டா வழங்குகிறது. வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் கொண்டுவரப்பட்டது. விவசாயிகள் நலன் காக்கும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதுடன், அவர்களது உரிமைகளையும் உறுதி செய்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் எதிரொலிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேய முதல் மாநிலமாக தமிழகத்தில் நியமன அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யும் முறையை தமிழக முதுல்வர் செயல்படுத்தி உள்ளார்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. மக்களுடன் மக்களாக களத்தில் நிற்கும் ஒரே முதல்வர் நமது முதல்வர். ஒவ்வொரு நாளும் மக்களுக்காக அயராது உழைக்கிறார். அடுத்து வரும் திராவிட மாடல் 2.O ஆட்சியில் இன்னும் அதிக திட்டங்களை முதல்வர் செயல்படுத்துவார். இந்த அரசுக்கு பக்கபலமாக இருந்து, தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: அவசர அழைப்பை ஏற்று உடனே உதவ சென்றதாக இந்திய கடற்படை விளக்கம்
06 Mar 2026மும்பை, ஈரான் கப்பல் தாக்கப்பட்டதும் தங்களுக்கு விடுத்த அவசர அழைப்பை ஏற்று உடனே உதவ சென்றதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
நாங்குநேரி இரட்டைக்கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
06 Mar 2026நெல்லை, நாங்குநேரி இரட்டைக்கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசாணை வெளியீடு
06 Mar 2026சென்னை, பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்துவதற்கான தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாடு '2030' செயல் திட்டத்தின் 14 அம்சங்கள் : கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Mar 2026சென்னை, வீட்டு வசதி முதல் ஜவுளித் துறை வரை தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான 14 திட்டங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இவற்றையெல்லாம் நனவாக்கி 2030-ம் ஆண்டில்
-
வரும் சட்டசபை தேர்தலில் 172 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தி.மு.க.
06 Mar 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் 172 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. முடிவு செய்துள்ளது.
-
பொள்ளாச்சி - பாலக்காடு இடையே புதிய ரயில் சேவைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்
06 Mar 2026திருவனந்தபுரம், பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடத்தில் புதிய ரயில் சேவைக்கான கேரளாவின் நீண்டகால கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் நிறைவேற்றியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் க
-
மாமல்லபுரத்தில் இன்று த.வ.க. சார்பில் மகளிர் தின விழா - விஜய் பங்கேற்பு
06 Mar 2026சென்னை, சென்னை மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெறும் மகளிர் தின விழாவில் விஜய் பங்கேற்கிறார்.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு பதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
06 Mar 2026சென்னை, அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளர் பதவியை வழங்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 6,520 ரூபாய் குறைந்தது
06 Mar 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்து விற்பனையானது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 6,520 குறைந்துள்ளது.
-
திருச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
06 Mar 2026திருச்சி, திருச்சி மாநாட்டில் வருங்கால திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
அடுதத் 30 நாட்களுக்கு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி
06 Mar 2026நியூயார்க், ரஷ்யாவிடமிருந்து இந்தியா 30 நாட்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
-
ட்ரம்பின் முன்னால் பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு தைரியமில்லை: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு
06 Mar 2026டெல்லி, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு முன்னால் பேசுவதற்கு மோடிக்கு தைரியமில்லை என்று ராகுல்காந்தி, கெஜ்ரிவால்
-
தனது சொந்த எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு வேறொரு நாட்டின் அனுமதி தேவையா? மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
06 Mar 2026சென்னை, தனது சொந்த எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு வேறொரு நாட்டின் அனுமதி தேவையா? என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 6 பேரின் மனுக்களும் ஏற்பு
06 Mar 2026சென்னை, மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க.
-
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
06 Mar 2026தென்காசி, திராவிட மாடல் 2.O ஆட்சியில் இன்னும் அதிக திட்டங்களை முதல்வர் செயல்படுத்துவார் என்றும், நீங்கள் தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் துணை முதல்வர் உதய
-
த.வெ.க.வுடன் தேர்தல் கூட்டணி; நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
06 Mar 2026சென்னை, த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் நிர்வாகிகளுடன் புதிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
ஆந்திராவில் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த விரைவில் தடை: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
06 Mar 2026அமராவதி, ஆந்திரப் பிரதேசத்தில், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.
-
மேகதாது அணை திட்டத்தை தீவிரப்படுத்தும் கர்நாடக அரசு பட்ஜெட் உரையில் சித்தராமையா அறிவிப்பு
06 Mar 2026பெங்களூரு, மேகதாது அணை தொடர்பான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார்செய்யப்பட்டு, அதனுடன் வனத்துறை அனுமதிக்கான முன்மொழிவு ஆகியவையும் விரைவில் மத்திய அரசிட
-
தென்காசியில் ரூ.44.05 கோடியில் புதிய அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
06 Mar 2026தென்காசி, தென்காசி மாவட்டத்தில் 7,127 பயனாளிகளுக்கு ரூ44.05 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. விநியோகத்தில் பாதிப்பா..? மத்திய அரசு வட்டாரங்கள் விளக்கம்
06 Mar 2026புதுடெல்லி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், எரிபொருள் போதுமான அளவு கிடைப்பதை உறுதிப்படுத்த உற்பத்தியை அதிகரிக்குமாறு அனை
-
நியாய விலை கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தது அரசு
06 Mar 2026சென்னை, நியாய விலை கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
-
9 மாவட்டங்களில் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்கம் திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர்
06 Mar 2026சென்னை, சென்னை மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை இயக்குநரகத்தில் காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்க
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
06 Mar 2026- கோவை கோணியம்மன் தீர்த்தம், யாழி வாகனத்தில் பவனி
- காங்கேயம் முருகப்பெருமான் விடாயாற்று உற்சவம்.
- திருவாரூர் தியாகராஜர் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
06 Mar 2026


