முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் சரிந்த தங்கம் விலை

திங்கட்கிழமை, 9 மார்ச் 2026      தமிழகம்      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து விற்பனையானது. நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,19,600-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி விற்பனையானது. 

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த 2-ம் தேதி முதல் தங்கம் விலை சரிவில் இருந்தது. இந்த சூழலில் கடந்த 7-ம் தேதி அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90, பவுனுக்கு ரூ.720 என உயர்ந்தது. இந்நிலையில், சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து விற்பனையானது. நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,19,600-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் ரூ.290-க்​கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.5,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து