முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

திங்கட்கிழமை, 9 மார்ச் 2026      வர்த்தகம்
Rupees-2

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.33 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகளும் கலக்கத்தில் உள்ளன. ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப்படைகள் தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய கடல் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

இதனால் உலக வரலாற்றில் கச்சா எண்ணெய் விலை ஒரேநாளில் 25 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 115 டாலராக உயர்ந்துள்ளது. இதன் விலை 150 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். இதனால் எண்ணெய் அதிகம் கொள்முதல் செய்யும் இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ. 92.20 என வர்த்தகம் தொடங்கிய நிலையில் ரூ. 92.33 ஆகக் குறைந்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் 92.528 ஆக மேலும் குறைந்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு ரூ. 91.82 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலகளவில் டாலர் மதிப்பு அதிகரித்து வருவதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த 2010ல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 46.67 ஆகவும் 2020ல் ரூ. 76 ஆகவும் 2025ல் ரூ. 90 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பங்குச்சந்தைகளும் நேற்று கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து