முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுல் மீதான அவதூறு வழக்கு: வருகிற 12-ம் தேதி விசாரணை

திங்கட்கிழமை, 9 மார்ச் 2026      இந்தியா
Rahul 2024-05-27

டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.

கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை ஹனுமன்கஞ்சைச் சேர்ந்த பாஜக தலைவர் மிஸ்ரா 2018-ல் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. 

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், புகார்தாரரின் வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே, சிறப்பு நீதிபதி சுபம் வர்மா இந்த வழக்கில் மேலும் வாதங்களை மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்தார். முன்னதாக, பிப்ரவரி 20 ஆம் தேதி ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதாகவும், தனது வாதத்திற்கு ஆதாரங்களை முன்வைப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார். 

இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நான் யாருக்கும் எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை, யாரையும் அவதூறு செய்யும் நோக்கத்துடன் அத்தகைய மொழியைப் பயன்படுத்தியதில்லை. எனது அறிக்கையைத் திரித்து ஒரு பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி கூறியதாக அவரது வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா கூறினார். இந்த வழக்கு மார்ச் 12-ம் விசாரணை நடத்தப்படும் என எம்.பி./எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து