முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் தள்ளிப்போகிறதா? 'ஜனநாயகன்' திரைப்படம் மறு ஆய்வு ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 9 மார்ச் 2026      சினிமா
Jana-Nayagan

சென்னை, விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான மறு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன்’ திரைப்பட தணிக்கைச் சான்றுக்கான மறு ஆய்வு நேற்று (மார்ச் 9) நடைபெற இருந்தது. தற்போது அது திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஒத்திவைப்பு என தகவல் தெரிய வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், ’ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கவும் உத்தரவிட்டார். 

தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய காலஅவகாசம் அளித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று தனிநீதிபதி பி.டி.ஆஷாவுக்கு உத்தரவிடப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து