எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போபால்,நவ.22 -பாரதிய ஜனதா கட்சியானது ஊழல் விஷயத்தில் மென்மையுடன் நடந்து கொள்கிறது. அந்த கட்சியை சேர்ந்த ஊழல்வாதிகளை கண்டிப்பதில்லை என்று சோனியா காந்தி கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஜபுவா மாவட்டத்தில் சோனியா காந்தி நேற்று தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாரதிய ஜனதாவை கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரஸ் கட்சியானது ஊழலை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்சிக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் பாரதிய ஜனதாவோ ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதில்லை. அதுவும் கட்சிக்காரர்கள் ஊழலில் ஈடுபட்டால் அதுபற்றி கவலைப்படுவதே இல்லை என்றார். மாநிலங்களுக்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. ஆனால் அந்த நிதியை குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் சரியாக பயன்படுத்துவதில்லை. அதனால் அந்த மாநிலங்களில் வளர்ச்சி குன்றி இருக்கிறது என்றும் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினார். மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தத்தான் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் பாக்கெட்டுகளை நிரப்புவதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் சோனியா சாடினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


