முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனி புயலால் வீசப்பட்ட கார்: 4 பேர் உயிர் தப்பிய அதிசயம்

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

அரிசோனா, டிச. 10 - அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிளாரா ரீனா ஹெர்னாண்டஸ்.  இவரும் இவரது சகோதரி மற்றும் அவரது 2 குழந்தைகளும் இரு தினங்களுக்கு முன்பு காரில் சுற்றுலா சென்றனர். 

வடக்கு அரிசோனா மலைப் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கடுமையான பனிப் புயல் வீசத் தொடங்கியது. 

இதனையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்தது. காரை கிளாரா ஓட்டினார். அனைவரும் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்து அமைதியாக இருக்கும் படி கிளாரா கேட்டுக் கொண்டார். 

மொத்த குடும்பமே பயத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் காரில் சுமார் 15 கி.மீ. வேகத்தில் சென்றனர். 

அப்போது பனிப்புயல் அவர்களது காரை வாரி சுருட்டி சாலையில் இருந்து அருகில் உள்ள பள்ளத்தாக்கில் வீசியது. 

சுமார் 10 முறை குட்டி கர்ணம் அடித்து 250 அடிபள்ளத்தில் கார் விழுந்தது. எனினும் அதில் இருந்த நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர். 

இது குறித்து கிளாரா கூறுகையில், அதிர்ஷ் டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. ஒரே ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.  

நாங்கள் உயிர் பிழைப்போம் என்று நினைத்துக் கூட பார்க்க முடிய வில்லை. அத்தனை அடி உயரத்தில் இருந்து விழுந்த விபத்தில் இதுவரை யாரும் தப்பிப் பிழைத்தில்லை. 

பின்னர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்து நாங்கள் பத்திரமாக மீட்கப்பட்டோம் என்று கண்ணீரோடு தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago