எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச.25 - இந்தியாவை வழி நடத்தும் அதிகாரத்தை முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்குவோம் என்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 26_வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனி பறிக்க தீவிர களப்பணி ஆற்றுவோம் என்று எம்ஜிஆர் நினைவிடம் முன்பாக அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காலமானார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று காலை 10.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து எம்ஜிஆர் நினைவிடத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழிகளை வாசிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உட்பட அனைத்து பிரிவு நிர்வாகிகளும் அங்கு திரளாக கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் திரும்பச்சொல்லி உறுதியேற்றனர்.
உறுதிமொழி விபரம் வருமாறு:_
ழூ அதிமுகவை உருவாக்கி தமிழக மக்களின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் எம்ஜிஆரின் புகழையும், மனிதாபிமான உணர்வுகளையும் எந்நாளும் மனதில் கொண்டு வாழ்வோம்.
ழூ முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் பல்வேறு திட்டங்களையும், சாதனைகளையும் கிராமங்கள் தோறும் பரப்ப உறுதி ஏற்போம்.
ழூ எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக வெற்றி சிகரத்தை தொடுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓய்வறியா உழைப்பும் ஒப்பற்ற தியாகமும்தான் காரணம் என்பதை ஒருநாளும் மறவாது இருக்க உறுதி கூறுகிறோம்.
ழூ 'எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' _ என்ற தூய உள்ளத்தோடு பணியாற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்திற்கும், அதிமுகவிற்கும் ஆற்றிவரும் அரும்பணிகளுக்கு எந்நாளும் நன்றியோடும், உறுதியோடும் இருப்போம்.
ழூ பொது வாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மக்கள் நலன் காக்க தன்னலம் இன்றி பாடுபடும் அதிமுக பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனம் மகிழும் வண்ணம் தூய தொண்டராக மக்கள் பணியாற்றுவோம்.
ழூ அறிவும் ஆற்றலும் மிக்க தலைவருமான முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூலமாக இந்திய திரு நாட்டிற்க்கு புதுவாழ்வு ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற இந்நேரத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அதிமுக முழுமையான வெற்றியை பெற அள்ளும் பகலும் அயராது உழைப்போம்.
ழூ தமிழ் மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசின் துரோகங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ழூ தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான காவிரி நதி நீர் பிரச்சனையில் முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ழூ இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானங்கள் தான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று உலக நாடுகள் பலவும் குரல் எழுப்புகின்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது என்ற உண்மையை தமிழக மக்களிடம் விலக்கிக் கூறுவோம்.
ழூ தமிழக முதலமைச்சர் தான் இந்திய நாட்டின் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை மக்களிடம் எடுத்துரைப்போம்.
ழூ அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டம், பண்ணை பசுமை காய்கறித் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவின் இத்தகைய திட்டங்களை இந்திய நாட்டிற்கே விரைந்து வர பணியாற்றுவோம்.
ழூ நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சொத்து தனியார் வசம் சென்றுவிடாமல் மதியுகமாய் செயல்பட்ட முதலமைச்சர் நாட்டிற்கே தலைமை ஏற்கும் நிலை வந்தால் மட்டுமே இந்திய நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.
ழூ எப்பொழுதும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவே சிந்தித்து அவர்களது வாழ்வு ஏற்றம் பெறுவதற்காகவே திட்டங்களை தீட்டி செயல்படுத்திவரும் முதலமைச்சருடைய வளர்ச்சித் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைய பணியாற்றுவோம்.
ழூ தமிழக மக்களுக்கு உண்மையான உணவுப் பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர்தான் பசிப்பிணி போக்கும் அன்னமிட்ட கை என்ற உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ழூ மக்களின் உடமைக்கும், உரிமைக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியை நடத்திய கருணாநிதியின் அராஜகங்களை முறியடித்து மக்களுக்கு பாதுகாப்பையும் நிறைவான வாழ்வையும் அளித்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான பொற்கால ஆட்சிக்கு மக்கள் பேராதரவை அளித்திட அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை செய்ய உறுதி ஏற்போம்.
ழூ விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40" தொகுதிகளிலும் அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்து எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் அதிகாரத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்கரங்களில் வழங்கும் வகையில் அர்ப்பணிப்போடு கூடிய கடும் உழைப்பின் மூலம் முழு ஆற்றலோடு களப்பணி ஆற்றுவோம்.
இவ்வாறு உறுதி ஏற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
யுவராஜ் சிங் மீண்டும் கேப்டன்
04 Jul 2025ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.
-
இங்கி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கைப்பற்றி முகமது சிராஜ் அசத்தல்
04 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கைப்பற்றி சிராஜ் அசத்தினார்.
587 ரன்கள் குவிப்பு...
-
செஸ் விளையாடவே பிடிக்கவில்லை: குகேஷிடம் தோற்ற கார்ல்சென் விரக்தி
04 Jul 2025சாக்ரப் : தற்போதைக்கு தனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை என்று உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
ஜடேஜா குறித்து நடுவரிடம் முறையிட்ட பென ஸ்டோக்ஸ்
04 Jul 2025பர்மிங்காம் : இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் தொடர்ந்து முறையிட்டுள்ளார்.
-
ஹாரி புரூக் - ஜேமி சுமித் அபாரம்: சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து அணி
04 Jul 2025பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஹாரி புரூக் மற்றும் ஜேமி சுமித் இருவரும் சதமடித்துள்ளனர்.
-
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்து சச்சினை முந்திய சுப்மன் கில்
04 Jul 2025பர்மிங்காம் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
05 Jul 2025சென்னை, பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் எஸ்.பி. ஆய்வு
05 Jul 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு நடத்தினார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே
05 Jul 2025மும்பை, மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே பங்கேற்றனர்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.