எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன், டிச. 21 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 4_வது சுற்றில் அசரென்கா வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
ஆனால் விம்பிள்டன் முன்னாள் சாம்பியனும், ரஷ்ய வீராங்கனையுமான மரியா ஷரபோவா 4_வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 4_வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் நடப்பு சாம்பியனான அசரென்காவும், அமெரிக்க வீராங்கனையும் மோதினர்.
இதில் இரண்டாம் நிலை வீராங்கனையும் பெலாரஸ் வீராங்கனையுமான அசரென்கா அபாரமாக ஆடி 6_3, 6_2 என்ற நேர் செட் கணக்கில் ஸ்டெப்ஹென்சை வீழ்த்தினார்.
கால் இறுதிச் சுற்றில் பெலாரஸ் வீராங்கனையான அசரென்கா போலந்து வீராங்கனை ரட்வன்ஸ்கா அல்லது ஸ்பெயின் வீராங்கனை கார்பினை எதிர்கொள்வார் என்று தெரிய வருகிறது.
ரஷ்ய முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவாவும், சுலோவேக்கிய வீராங்கனையான சிபுல்கோவாவும் மற்றொரு 4_வது சுற்றில் பலப்பரிட்சை நடத்தினர்.
இதில் சிபுல்கோவா சிறப்பாக ஆடி, 3_6, 6_4, 6_1 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை தோற்கடித்து கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
உலகின் 3_ம் நிலை வீராங்கனையான ஷரபோவா விம்பிள்டன் முன்னாள் சாம்பியன் ஆவார். இங்கு 2008 _ம் ஆண்டு பட்டம் வென்றுள்ளார்.
நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் நம்பர் _ 1 வீராங்கனையான செரீனா அதிர்ச்சிகரமாக தோற்றார். நேற்றைய ஆட்டத்தில் மரியா தோற்று இருக்கிறார்.
ருமேனியாவின் முன்னணி வீராங்கனையான சிமோனா 6_4, 2_6, 6_0 என்ற செட் கணக்கில் 8 _ம் நிலை வீராங்கனையான ஜெலீனா ஜான்கோவிக்கை வெளியேற்றினார்.
ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் 3_வது சுற்றில் முதல் நிலை வீரர்களான பிரையன் சகோதரர்கள் தோற்று வெளியேறினர்.
இந்தப் போட்டியில் பாப் பிரையன் மற்றும் மைக் பிரையன் ஜோடி 6_7 (11), 4_6 என்ற நேர் செட் கணக்கில் எரிக் (அமெரிக்கா) _ கிளாசன் (தென் ஆப்பிரிக்கா) இணையிடம் தோற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


