எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், ஜன, 30 - அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது எந்த எண்ணமும் இல்லை. எனினும், அது தொடர்பாக எதிர்காலத்தில் ஆலோசிப் பேன் என்று முன்னாள் வெளியுற வுத் துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“தேர்தலில் போட்டியிடுவது பற்றி சிந்திக்கவில்லை. இது தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என்று எனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளேன். எனினும், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எதிர் காலத்தில் ஆலோசித்து முடிவு செய்வேன். இப்போதைக்கு நமது வெற்றிக்குத் தேவையான செயல்களில் ஈடுபடுவதே போதும் என்று நினைக்கிறேன்.
நான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, 2012-ம் ஆண்டு லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. எனது பதவி காலத்தில் சந்தித்த மிகப்பெரிய பிரச்சினை, அந்த தாக்குதல் சம்பவம்தான்” என்றார்.
லிபியா தூதரக தாக்குதல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி யான குடியரசு கட்சி, ஒபாமா அரசை கடுமையாக குறை கூறியுள்ளது. ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு எதிரான பிரச்சாரத்தில் லிபியா தூதரக சம்பவத்தை மீண்டும் எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும்; கடுமையான விமர்சனத்தை முன்வைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


