எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,பிப்,6 - கச்சத்தீவு,தனுஸ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை புதன் கிழமை காலையில் இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கப்பட்டனர். ராமேசுவரம் பகுதியிலிருந்து சென்ற சில மணி நேரத்தில் மீனவர்களை சிறைபிடித்ததால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன் கிழமை காலையில் 589 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.தலைமன்னார்,தனுஸ்கோடி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த சுவிட்டர்,கான்ஸ் ஆகியோரின் படகில் சென்ற15 மீனவர்களை சிறைப்பிடித்தனர். மீனவர்களை மாலைவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவில்லை.மேலும் மீனவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தப்படலாம் என ராமேசுவரம் மீனவ சங்க தலைவர்கள் எதிர் பார்க்கப்படுகின்றனர்.
தொடர்ந்து மீனவர்களை சிறைப்பிடிப்பதால் ராமேசுவரம் மீனவர்கள் பெறும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனரிடம் கேட்டபோது.ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 2 படகு 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றதாக படகு உரிமையாளர்கள் தகவல் தெரிவித்தனர்.ஆனால் அரசு சார்பாக அதிகாரபூர்வமான தகவல் ஏதும் இதுவரை வரவில்லை என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


