Idhayam Matrimony

வேற்றுக்கிரக பறக்கும் தட்டு அமெரிக்கா மீது பறந்ததா?

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப். 11 - அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தின் மீது வேற்றுக் கிரக பறக்கும் தட்டு பறந்ததாக, இணையதளத்தில் பிரபலமடைந்து வரும் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தெற்கு சார்லோட்டில் உள்ள போர்ட் மில் பகுதியில் குவாங் டிரான் என்பவர் கடந்த ஜனவரி 30-ம் தேதி, வானில் வேற்றுக் கிரக பறக்கும் தட்டு போன்ற ஒன்றைப் பார்த்துள்ளார். உடனடியாக அதனைத் தன் மொபைல் போனில் உள்ள கேமரா மூலம் வீடியோவாகப் பதிவு செய்தார். ஒரு நிமிடத்துக்குள்ளாக அது மறைந்து விட்டது. பின்னர் 2-வது முறையாக எடுத்த வீடியோவில் மற்றொரு வேற்றுக்கிரக பறக்கும் தட்டு போன்ற ஒன்று தெரிகிறது. 

அது இடது புறமாகவும் பின் னர் வலது புறமாகவும் செல்கி றது. பார்ப்பதற்கு பயணிகள் பயணிப்பதற்கு ஏதுவானது போல் தெரிகிறது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்த வீடியோ யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் கருத்துகளைப் பதிவு செய்து ள்ள பலரும் இது தொடர்பாக விவாதித்து வருகின்றனர். 

அது ஆளில்லா விமான மாகவோ, ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் பொம்மை யாகவோ இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago