எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிகாகோ, மே - 26 - இந்தியாவுக்கு தான் செல்லும்போது தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் மும்பை தாக்குதல் தீவிரவாதி டேவிட் ஹெட்லி தனது குடும்பத்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு உயில் எழுதி அதை தனது நண்பனுக்கு ஈமெயில் மூலம் அனுப்பிவைத்துள்ளான். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 மும்பை தாக்குதல் சம்பவத்தில் கூட்டுச் சதியாளனாக செயல்பட்ட டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான். இவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை தாக்குதல் நடந்த பிறகு 2009 ஆம் ஆண்டு ஹெட்லி இந்தியாவுக்கு வந்தான். அவன் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக 2009 மார்ச் 3 ம் தேதி தனது நண்பன் தகவூர் ராணாவுக்கு ஒரு ஈமெயில் அனுப்பினான். அதில் தனது மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் என்னென்ன செய்வது என்பது குறித்த விபரங்களை தெரிவித்திருக்கிறான்.
நான் இந்தியாவுக்கு போகப்போகிறேன். இப்போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே நான் கைது செய்யப்படலாம். அல்லது இறக்கவும் நேரிடலாம். அதனால் இந்தியாவுக்கு போவதற்கு முன்பாக எனது மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விபரங்களை இத்துடன் அனுப்பியுள்ளேன் என்று அந்த ஈமெயிலில் ஹெட்லி கூறியிருந்தான்.
மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் பாதுகாப்பு கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இந்தியாவுக்கு செல்ல ஹெட்லி பயப்பட்டு இருக்கிறான். அதனால்தான் இந்த உயில் விபரங்களை ராணாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறான். இந்த விபரங்களை அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஹெட்லி பயந்ததுபோல் இந்தியாவில் எதுவும் நடக்கவில்லை. ஹெட்லி தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியிருக்கிறான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


