எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.5 - முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் கமலஹாசன், விஜய் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் சந்தித்தனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் சக்தியின் மூலம் மகத்தான வெற்றி பெற்று மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளதையொட்டி, அவரை திரை உலகத்தினர் நேற்று சந்தித்து அவரது தலைமையில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பீடுநடை போட தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை முன்னணி நடிகர் கமலஹாசன், நடிகை கெளதமி, மகள்கள் அக்ஷரா ஹாசன், சுப்புலட்சுமி, நடிகர் பிரபு மற்றும் அவரது மனைவி புனிதா, விக்ரம் பிரபு மற்றும் அவரது மனைவி, நடிகர் ராம்குமார் மற்றும் அவரது மனைவி, பிரபு சித்தப்பா மகன் கிரி சண்முகம் மற்றும் கிரி சண்முகம், பிரபு சம்பந்தி மதிவாணன் மற்றும் மதிவாணன், ராம்குமார், மகன் துஷ்யந்த், திரைப்பட நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், பழம்பெரும் திரைப்பட குணச்சித்திர நடிகர் வி.எஸ்.இராகவன், பழம்பெரும் திரைப்பட நடிகைகள் சி.சுகுமாரி, குமாரி சச்சு என்கிற என்.எஸ்.சரஸ்வதி, எஸ்.என்.லட்சுமி, இராஜஸ்ரீ, காஞ்சனா, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, திரைப்பட தயாரிப்பாளர் ஜெயந்தி ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், திரைப்பட ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோர் சந்தித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவியேற்று நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கு தங்களின் மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
அவர்களின் வாழ்த்துக்களை இன்முகத்தோடு பெற்றுக் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திரைப்படத் துறையினர் தன்னை நேரில் வந்து சந்தித்து தன்னை பாராட்டியமைக்கு தனது நன்றியை மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்துக் கொண்டார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


