எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ,ஜூன்.5 - முறைகேடு புகாருக்கு ஆளாகி உள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகாவிட்டால் அவரை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தி உள்ளது. பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் நிருபர்களிடம் கூறியதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள முறைகேடு புகாருக்கு ஆளான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது இந்த முறைகேடு நடந்துள்ளது. எனவே அவர் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


