முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசாவிடம் சிறப்பு நீதிமன்றம் வாக்குமூலம் பதிவு

திங்கட்கிழமை, 5 மே 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.6 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசாவிடம், டெல்லி சிறப்பு நீதிமன்றம் வாக்குமூலம் பதிவு செய்தது.

வாக்குமூலம் பதிவு செய்யப்படும் முன் நீதிபதி ஓ.பி.சைனி கூறுகையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. இது நீதிபதிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையேயான நேரடி உரையாடல். கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், அளிக்காமல் இருப்பதும் குற்றம் சாட்டப்பட்டவரின் விருப்பம் என்றார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணியை மே 5-ம் தேதி (நேற்று) மேற்கொள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் எற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நேற்று வாக்குமூலங்கள் பதிவு செய்வதை நீதிமன்றம் தொடங்கியுள்ளது.

கடைசியாக இந்த வழக்கு ஏப்ரல் 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 824 பக்கங்களில் 1,718 கேள்விகளுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

அதற்கு டெல்லி சிறப்பு நிதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி  பதில் அளிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்னை நேரடியாக எதிர் கொள்ளும் நேரம் வந்து விட்டது. இப்போதைக்கு கால அவகாசம் அளிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை. ஆனால் வாக்குமூலங்களை பதிவு செய்ய தொடங்கிவிட்டால் அதை நிறுத்தக்கூடாது. புல்லட் வேகத்தில் எனக்கு பதில்களை அளிக்க வேண்டும். வாக்குமூலம் பதிவு ஆரம்பித்த பிறகு அது எந்தவித இடைவெளியும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பேன் என தெரிவித்தார்.

மேலும், விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் குற்றம்சாட்டப்பட்டோர் செயல்படக் கூடாது எனவும் நீதிபதி கண்டித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று வாக்குமூலங்களை பதிவு செய்யும் பனி தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago