முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர சட்டசபை சபாநாயகராக நாதேந்த்லா மனோகர் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,மே.5 - ஆந்திர மாநில சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,நாதேந்த்லா மனோகர் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ட்கிரண் குமார் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தது. சபையை துணைசபாநாயகராக இருந்த நாதேந்த்லா மனோகர் நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பாக மனோகர் போட்டியிட்டார். முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேச கட்சி சார்பாக கே.இ.கிருஷ்ண மூர்த்தி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்டார். முதலில் சபை விதிமுறைகளை மீறி ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு தெலுங்குதேச கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு தேர்தலை நடத்திய தற்காலிக சபாநாயகர் திவாகர் அமர்ந்திருந்திருந்த இருக்கையை தாக்க தொடங்கினர். இதனையொட்டி மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மனோகருக்கு ஆதரவாக 158 ஓட்டுக்களும் கிருஷ்ணமூர்த்திக்கு 90 ஓட்டுக்களும் கிடைத்தன. மனோகர் 68 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அந்தெந்த கட்சிகளுக்கு வாக்களித்தனர். மேலும் பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago