எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி, ஜூன்.- 6 - தருமபுரி நகரில் 33 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக நகர் முழுவதும் தோண்டப்பட்ட பள்ளங்கள் வெகு நாட்களாக மூடப்படாமல் பணிகள் நிறைவு செய்யப்படாததால் தருமபுரி நகர பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். இந்நிலையில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் பாதாள சாக்கடை பணிகளை விரைவுபடுத்தி நிறைவு செய்திட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி தருமபுரி நகரில் நிறைவு பெறாமல் உள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தருமபுரிக்கு வந்த தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி. முனுசாமி நகராட்சி அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களுக்கு இடையூராக உள்ள போக்குவரத்து பிரச்சனைகளை தீர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சரின் விரைவான இந்த நடவடிக்கையை தருமபுரி நகர பொதுமக்கல் வரவேற்று பாராட்டியுள்ளனர். ஆய்வின் போது உயர்கல்வி துறை அமைச்சர் பி.பழனியப்பன், நகராட்சி ஆணையாளர் அண்ணாதுரை, பொறியாளர் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


