எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரியோடிஜெனீரோ, மே, 30 - உலகமெங்கும் கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் 2014 ம் ஆண்டிற்கான உலக கால்பந்தாட்டப்போட்டி ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை பிரேசிலில் நடக்கவுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு கிரிக்கெட் ஜூரம் என்றால் உலகில் முக்கால்வாசிப் பேருக்கு கால்பந்துக் காய்ச்சல்தான் அதிகம். இப்படிப்பட்டர்களுக்கு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி வந்து விட்டால் போதும் போட்டது போட்டபடி.. கமான் கமான் என்று டிவி முன்பும் முடிந்தால் போட்டி நடக்கும் ஸ்டேடியங்களில் குவிந்தும் குதூகலிக்க ஆரம்பித்து விடுவார்கள். உலகக் கோப்பைப் போட்டி நடக்கும் இந்த ஒரு மாத காலமும் உலகம் முழுவதும் இதுதான் பேச்சாக இருக்கும். யார் எத்தனை கோல் அடிப்பார்கள்.. எந்த அணிக்குக் கோப்பை.. என்ற ஹேஸ்யங்களும், ஜோசியங்களும் களை கட்டியிருக்கும். உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி எவ்வளவு ஹாட்டானதோ அதை விட ஹாட்டானது அதைப் பார்க்க வரும் ரசிகர் கூட்டம்.. ஆண்கள் மட்டுமல்ல, பெண் ரசிகைகளும்தான். வாருங்கள்.. உலகக் கோப்பைப் போட்டித் தொடர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை கண்கவர் கால்பந்து ரசிகைகளின் புகைப்படங்களி்ன் துணையுடன் ஒரு ரவுண்டு பார்த்து விட்டு வரலாம்.
கால்பந்துக்காக உயிரையே கொடுக்கத் துணியும் ரசிகர்களைக் கொண்ட பிரேசில் நாட்டில்தான் 2014ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதை 2007ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிஃபா எனப்படும் உலக கால்பந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தத் தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் தானாகவே போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றது. மற்றவர்கள் தகுதிப் போட்டிகள் மூலம் தகுதி பெற்றார்கள்.
ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், தென் கொரியா, அல்ஜீரியா, காமரூன், கானா, ஐவரி கோஸ்ட், நைஜீரியா, கோஸ்டா ரிகா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈகுவடார், உருகுவே, பெல்ஜியம், போஸ்னி ஹெர்ஸகோவினா, குரோஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ரஷ்யா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள்தான் இந்த வருடத்து உலகக் கோப்பைப் போட்டியில் மோதப் போகின்றன.
உலக்க கோப்பைக் கால்பந்துப் போட்டியில் மாபெரும் பரிசுத் தொகை காத்திருக்கிறது. மொத்தப் பரிசுத் தொகை 576 மில்லியன் டாலராகும். இது கடந்த 2010 தொடரை விட 37 சதவீதம் கூடுதலாகம்.
குரூப் போட்டிகளுடன் விடைபெறும் 16 அணிகளுக்கு தலா 80 லட்சம் டாலர் பரிசுத் தொகையாக தரப்படும்.
ரவுண்ட் 16 வரை வந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 90 லட்சம் டாலர் பரிசாக தரப்படும்.
காலிறுதிப் போட்டிகள் வரை வந்து வெளியேறும் 4 அணிகளுக்கு தலா 1.4 கோடி டாலர் பரிசாக கிடைக்கும்.
4வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 2 கோடி டாலர் பரிசாக கிடைக்கும். 3வது இடம் பிடிக்கும் அணிக்கு 2.2 கோடி டாலர் பரிசாக கிடைக்கும்.
கோப்பையை வெல்லும் அணிக்கு 3.5 கோடி டாலர் பரிசுத் தொகை கிடைக்கும். 2வது இடம் பெறும் அணிக்கு 2.5 கோடி டாலர் பரிசாக கிடைக்கும்.
ரியோடிடி ஜெனீரோ, பிரேசிலியா, சாவோ பாலோ, போர்டாலெஸா, பெலோ ஹாரிசான்டே, சால்வடார், போர்டோ அல்கெரே, ரெசிபி, குயாபா, மனாஸ், நடால், கரிடிபா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும்.
ஏ, பி,சி, டி, இ, எப், ஜி, எச் என மொத்தம் 8 குரூப்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் போட்டியை நடத்தும் பிரேசில், குரோஷியா, மெக்ஸிகோ, காமரூன் ஆகியவை உள்ளன.
பி பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா ஆகியவை வருகின்றன.
சி பிரிவில் கொலம்பியா, கிரீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான் ஆகியவை உள்ளன.
டி பிரிவில் உருகுவே, கோஸ்டா ரிகா, இங்கிலாந்து, உருகுவே ஆகிய அணிகள் உள்ளன.
இ பிரிவில் சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோண்டுராஸ் ஆகியவை வருகின்றன.
எப் பிரிவில் அர்ஜென்டினா, போஸ்னியா ஹெர்ஸகோவினா, ஈரான், நைஜீரியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஜி பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா ஆகியவை உள்ளன.
எச் பிரிவில் பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷ்யா, தென் கொரியா ஆகிய அணிகள் உள்ளன.
காலிறுதிப் போட்டிகள் ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு அரை இறுதிப் போட்டிகளும் நடைபெறும்.
3வது இடத்துக்கான போட்டி ஜூலை 12ம் தேதி நடைபெறும்.
ஜூலை 13ம் தேதி கோப்பையைப் பெறப் போகும் அணியை இறுதி செய்யும் இறுதிப் போட்டி நடைபெறும்.
கடந்த 201ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்பெயின் அணி அபாரமாக ஆடி கோப்பையைக் கைப்பற்றியது. 2வது இடத்தை நெதர்லாந்தும், 3வது இடத்தை ஜெர்மனியும், 4வது இடத்தை உருகுவேயும் கைப்பற்றின. இந்த முறை கோப்பையை வெல்லப் போவது யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


