எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிர்பூர், பிப். 27 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதி ரான லீக் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந் தோம் என்று அயர்லாந்து அணியின் கேப்டனான வில்லியம் போர்ட்டர் பீல்டு தெரிவித்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன் தினம் மிர்பூரி ல் நடந்த ஆட்டத்தில் வங்காளதேச அணி 27 ரன் வித்தியாசத்தில் அயர் லாந்து அணியை தோற்கடித்து முன்னிலை பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்னில் சுருண்ட து. இதில் துவக்க வீரர் தமீம் இக்பால் 44 ரன்னும், ரகிபுல் ஹாசன் 38 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய அயர்லாந்து 45 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 178 ரன்னில் சுருண்டது. நீல் ஓ பிரைன் அதிகபட்சமாக 38 ரன் எடுத்தார். வங்காளதேச பெளலர் சைபுல் அபாரமாக பந்து வீசி 4 விக் கெட் கைப்பற்றினார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான இந்த லீக்கில் வெற்றி பெற்றது குறித்து வங்காளதேச அணியின் கேப்டனான ஷாகிப் அல் ஹசனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது -
வங்காளதேச அணி வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. எங்களது பந்து வீச்சும், பீல்டிங்கும் வெற்றிக்கு காரண மாக இருந்தது. சைபுல் இஸ்லாம் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. ரசிகர்களின் ஒட்டு மொத்த ஆதரவு இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
வங்கதேச அணிக்கு எதிரான இந்த லீக்கில் தோல்வி அடைந்தது குறித் து அயர்லாந்து அணியின் கேப்டனான வில்லியம் போர்ட்டர்பீல்டிட ம் கேட்ட போது, அவர் கூறியதாவது -
எங்களது பெளலர்கள் சிறப்பாக பந்து வீசி 205 ரன்னுக்குள் வங்காள தேச அணியை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை. மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


