எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.27 - பாசன நீர் திட்டம், குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து பாலக்கோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்தாண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பாசனத் திட்டங்கள், குடிநீnullர்த் திட்டங்கள் உட்பட அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் கிடப்பில் போடுவதில் தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வந்துள்ளது.
உதாரணமாக, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாசன வசதி மற்றும் குடிநீnullர் வசதி பெறும் வகையில் நான்கு திட்டங்கள் தீட்டப்பட்டு, அதில் கிருஷ்ணகிரி வலதுபுறக் கால்வாயை nullநீட்டித்து 34 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் எனது ஆட்சிக் காலத்திலேயே முடிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக மற்ற மூன்று திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. பின்னர் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மைனாரிட்டி தி.மு.க. அரசு, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பாப்பாரப்பட்டி ஏரி திட்டத்திற்கு மட்டும் தான் நிதி ஒதுக்கீடு செய்தது. மற்ற இரண்டு திட்டங்களான பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீnullரை எரணஹள்ளி ஏரி, புலிக்கரை ஏரி போன்ற 14 ஏரிகளுக்கு எடுத்துச் செல்லும் திட்டம் மற்றும் செங்கன்பஸ்தலாவ் ஏரியிலிருந்து தண்டுகரணஹள்ளி, கொண்டசாமனல் ஏரி போன்ற 10 ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டம் ஆகியவற்றை மைனாரிட்டி தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கழகத்தின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டு நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல் நாட்டின் வளத்தை சுரண்டும் பணியில் தான் மைனாரிட்டி தி.மு.க. அரசின் கவனம் இருக்கிறது. மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரால் இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழலின் மூலம் கருணாநிதி குடும்பத்தினர் மிகுந்த பலன் அடைந்துள்ளனர்.
முதல் கட்டமாக கருணாநிதியின் குடும்ப டி.வி.யான கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி குடும்ப டிவியின் பங்குதாரர்களான கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு, மூன்றாவது துணைவியின் மகள் கனிமொழி உள்பட கருணாநிதி குடும்பத்தினர் வீடுகளில் சோதனை நடத்தி அவர்களை விசாரித்தால், அவர்கள் சுருட்டிய பல லட்சம் கோடி ரூபாய்கள் குறித்த உண்மைகள் வெளிவரும். ஆனால், இது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
ஆகவே, தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி nullநீரை கால்வாய் மூலம் 24 ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் இரு திட்டங்களை கிடப்பில் போட்டுள்ள மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்த கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், இன்று (27.2.2011 ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணியளவில், பாலக்கோடு பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி., தலைமையிலும், தருமபுரி மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


