முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரோன் பந்தில் பெயர்ந்த ஸ்டூவர்ட் பிராட் மூக்கு!

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable


மான்செஸ்டர், ஆக.10 - இந்தியா -இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் மென்டஸ்டர் மைதானத்தில் நடந்து வருகிறது. 3வது நாளான நேற்று இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு 9விக்கெட்டை இழந்தது.
ஆனாலும் அவர்களால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியவில்லை. இங்கிலாந்து அணியின் முக்கிய பவுலரான ஸ்டூவர் பிராட்டின் மூக்கை ஆக்ரோஷமான பவுன்சர் மூலம் பெயர்த்தா வருண் ஆரோன்.
உணவு இடைவேளைக்குப் பிறகான ஆட்டத்தில் 98வது ஓவரி வீச வந்த வருண் ஆரோன், பிராடிற்கு தொடர்ந்து அதிவேக பவுன்சர்களை வீசிவந்தார்.
அதில் இரண்டு பந்துகளை சிக்சருக்குத் தூக்கினார் பிராட். அடுத்த பந்து மணிக்கு சுமார் 142 கிமீ வேகத்தில் எகிறி வந்தது. புல் ஆட முயன்று கூடுதல் வேகம் காரணமாக பீட் ஆனார் பிராட்.. பந்து ஹெல்மெட் கிரில்லிற்கும் மேல் முனைக்கும் உள்ள இடைவெளியில் உள்ளே புகுந்து மூக்கின் மையத்தைத் தாக்கியது. ரத்தம் கொட்டியது. மேலும் ஆட முடியாமல் 12 ரன்னில் பெவிலியன் திரும்பினார் பிராட்..
2வது இன்னிங்சில் அவரால் பந்து வீச முடியுமா என்பது சந்தேகமாகியுள்ளது.
முன்னதாக பங்கஜ் சிங், ஜோ ரூட்டையும், ஜோஸ் பட்லரையம் வீழ்த்தி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆண்டர்சன் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்ற இங்கிலாந்து 367 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளுடன் முடிந்தது. இந்தியாவைக் காட்டிலும் இங்கிலாந்து 215 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago