எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.- 20 - இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், ராஜ்பக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவும் ஜெயலலிதா தொடர்ந்து குரல் கொடுப்பார். அவர் யாருக்கும் பயப்பட மாட்டார். அவரது துணிச்சல் பாராட்டுக்குரியது என்று நடிகர் சத்யராஜ் முதல்வர் ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டினார்.ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. சைதாப்பேட்டை தேரடி திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-
இலங்கையில் ஈழத் தமிழர்களின் நலனை காக்கும் வகையில் தமிழக சட்ட மன்றத்தில் முதல்அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கவும் ஜெயலலிதா தொடர்ந்து குரல் கொடுப்பார். யாருக்கும் அவர் பயப்படமாட்டார். அவரது துணிச்சல் பாராட்டுக்குறியது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீராங்கனை வேலு நாச்சியார் போன்று வீரம் மிக்கவர் ஜெயலலிதா. தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சீமானும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், சீமானும் இரட்டை குழல் துப்பாக்கிகள். இங்கு அலையென திரண்டு வந்திருக்கும் nullநீங்கள் எல்லாம் சீமானை புரிந்து கொண்டு இங்கு வந்திருக்கிறீர்கள். தமிழ் ஈழம் மலர முதல் அமைச்சர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு சத்யராஜ் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


