எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,பிப்.28 - பாராளுமன்ற லோக்சபையில் இன்று (28-ம் தேதி) திங்களன்று 2011-2012-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வருவதால் புதிய வரிகள் இருக்காது. மேலும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தொகையும் ரூ. 2 லட்சமாக உயரக்கூடும் என தெரிகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜே.பி.சி. எனப்படும் கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு சம்மதித்த காரணத்தால் இந்த கூட்டத்தொடர் அமைதியாகவே நடந்து வருகிறது. முதல் நாளன்று மரபுப்படி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்,பாராளுமன்ற இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கறுப்பு பணம் ஒழிக்கப்படும்.
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் போன்ற உறுதிகளை அளித்தார். பின்னர் நேற்றுமுன்தினம் இந்தாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதிலும் பயணிகள் கட்டணமோ அல்லது சரக்கு கட்டணமோ உயர்த்தப்படவில்லை. இருப்பினும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் மம்தா பானர்ஜி அறிவித்தார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மம்தாவின் பட்ஜெட் மேற்குவங்கத்தின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது என்று பாரதிய ஜனதா கிண்டல் அடித்துள்ளது. இந்த பட்ஜெட்,சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் மட்டும் இது வளர்ச்சிக்குரிய பட்ஜெட் என்று கருத்து தெரிவித்துள்ளது. பொருளாதார ஆய்வு அறிக்கையும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் இன்று பாராளுமன்ற லோக்சபையில் இந்தாண்டுக்கான பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வழக்கும்போல் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். இந்தாண்டில் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், புதுவை ,அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. அதன் காரணமாக இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் இருக்காது என்றும் அப்படி இருந்தாலும் அதிகமாக இருக்காது என்று பரவலாக நம்பப்படுகிறது.
மேலும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தற்போது ரூ. 1.6 லட்சமாக இருக்கிறது. இந்த உச்சவரம்பு ரூ.1.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பல சலுகைகள் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்பவர்களுக்கு வரிவிலக்கு உச்சவரம்பு தொகை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த துறையில் ரூ.20 ஆயிரம் வரை முதலீட்டிற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு தொகை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இந்தாண்டு பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை அளவு 4.7 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படலாம். நேரடி வரிவிதிப்பு விதிமுறையில் வருடாந்திரத்திற்கு ரூ.2 லட்சத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் வரிவிலக்கு அளிக்க நிதி அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. இந்த உச்சவரம்பை மேலும் அதிகரிக்க படலாம் என்று தெரிகிறது. இந்தாண்டு விலைவாசி உயர்வு அதிகமாக இருப்பதால் மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் வகையில் வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. அதேசமயத்தில் மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஒரு தேர்தல் பட்ஜெட்டாகவே இருக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு அதன் மீது விவாதம் நடைபெறும். சுமார் 2 மாத காலம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும். சட்டசபை தேர்தல்கள் வருவதால் கூட்டத்தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


