எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், ஜூலை - 6 - தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா பகுதியில் 2 நாள் பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் தெலுங்கானா பகுதியின் 11 மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மேலும் இப்பிரச்சனையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், விஜயசாந்தி ஆகியோர் தங்களது எம்.பி. பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கித் தர வேண்டும் என்று கோரி தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து தனி தெலுங்கானா அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் உறுதியளித்தபடி இன்னும் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படவில்லை. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்பதில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக உறுதியாக உள்ளன. நேற்று முன்தினம் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளைச் சேர்ந்த 75 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தள்ளனர். மேலும் 12 எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆந்திர அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், அக்கட்சியின் எம்.பி. விஜயசாந்தி ஆகியோர் தங்களது எம்.பி. பதவிகளை நேற்று ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் சபாநாயகர் மீராகுமாரை சந்திக்கப்போவதாக சந்திரசேகரராவ் கூறியுள்ளார். மேலும் 2 தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் 11 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆந்திர மாநில ஜவுளித்துறை அமைச்சர் சங்கர்ராவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆந்திர துணை சபாநாயகருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இவரையும் சேர்த்து ராஜினாமா செய்துள்ள ஆந்திர அமைச்சர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் தெலுங்கானா பகுதியில் ஐதராபாத் உட்பட 11 மாவட்டங்களில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் தெலுங்கானா பகுதி முழுவதுமே ஸ்தம்பித்தது. 2 நாள் பந்த் போராட்டத்தை அடுத்து இந்த பகுதியில் கடைகள் வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மார்க்கெட்டுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. தெலுங்கானா அரசியல் கூட்டு செயற்குழு அழைப்பிற்கு இணங்க நேற்று இந்த பந்த் நடைபெற்றது. பந்த்தின் காரணமாக பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் இயக்கப்படவில்லை. சில இடங்களில் சாலைகளில் ஓடிய வாகனங்களை வழிமறித்து தெலுங்கானா ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்த முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மாணவர்கள் மீறிச் சென்றதால் போலீசார் மாணவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் பெரும்பாலான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் ஆட்டோ ரிக்ஷாக்கள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தன. இந்த இரண்டு நாள் பந்த்தை முன்னிட்டு தெலுங்கானா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வரும் நாட்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையை ஏற்படுத்தி போராட்டம் நடத்தப்படும் எனவும் கூட்டு செயற்குழு அறிவித்துள்ளது. தெலுங்கானா அரசியல் கூட்டு செயற்குழுவில் டி.ஆர்.எஸ்., பி.ஜே.பி. உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. தெலுங்கானா பகுதியில் நேற்று நடந்த பந்த் போராட்டத்தினால் அந்தப் பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த 2 நாள் போராட்டத்தின் காரணமாக தெலுங்கானா பகுதியில் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு வங்கி பணப் பரிமாற்றங்கள் முடங்கிப்போயுள்ளன. இந்தப் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் வங்கிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே வங்கிக் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்று வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் ஒருவர் கூறினார். வங்கி பண பரிமாற்ற முட்டுக்கட்டைகளை போக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பேச்சு
24 Jan 2026சென்னை, தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய் என்று தெரிவித்துள்ள செங்கோட்டையன், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
24 Jan 2026சென்னை, காவல்துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிப்பு
24 Jan 2026டெல்லி, 2026ம் ஆண்டுக்கான கலை, சமூகம், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
-
சத்துணவு, அங்கன்வாடி மற்றும் தூய்மை ஊழியர்களுக்கு பணி நிறைவு தொகை, ஓய்வூதியம் அதிகரிப்பு: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
24 Jan 2026சென்னை, சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும
-
வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ள துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
24 Jan 2026சென்னை, வரும் கல்வி ஆண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படவுள்ள நீட் தேர்வை கைவ
-
தி.மு.க.வில் இணைகிறாரா..? அமைச்சர் சேகர்பாபு-ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
24 Jan 2026சென்னை, அமைச்சர் சேகர்பாபு - ஓ.பி.எஸ். சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியில் ரோஜ்கார் மேளா: 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கினார்
24 Jan 2026புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் நடந்த ரோஜ்கார் மேளாவில் 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
-
நாளை குடியரசு தின விழா: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை
24 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.
-
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்: சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்
24 Jan 2026சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
-
கவர்னர் உரையில் மாற்றுக் கருத்து இருந்தால் மத்திய அரசைதான் கவர்னர் கேள்வி கேட்க வேண்டும்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Jan 2026சென்னை, கவர்னர் உரையில் மாற்றுக் கருத்து இருந்தால், மத்திய அரசைத்தான் கவர்னர் கேட்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் அனுமதி தேவையில்லை என்ற அரசாணைக்கு ஐகோர்ட் தடை
24 Jan 2026மதுரை, வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் முன் அனுமதி சான்று பெற தேவையில்லை என்ற அரசாணைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
வருமானத்தை மறைத்ததற்காக அபராதம்: விஜய் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு தள்ளிவைப்பு
24 Jan 2026சென்னை, வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியலை தந்துள்ளோம்:நான் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்காக வாழ்கிறேன்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
24 Jan 2026சென்னை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால் ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான், மக்களுக்காகத் திட்டங்களை தீட்டினான், மாநிலத்தை வளர்த்தெடுத்தான் என்ற
-
சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
24 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –26-01-2026
25 Jan 2026 -
ஜனநாயகத்தின் உணர்வை மதிக்க வேண்டும்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
25 Jan 2026புதுடெல்லி, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உள்துறை அமைச்சர் அமித்ஷா 28-ம் தேதி தமிழ்நாடு வருகை
25 Jan 2026சென்னை, உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார்.
-
தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய்தான்: த.வெ.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பேச்சு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய்தான் என்றும், த.வெ.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் த.வெ.க.
-
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
25 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நாளை (ஜன., 27ம் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
-
குஜராத்தில் விபத்து - 6 பேர் பலி
25 Jan 2026காந்தி நகர், குஜராத்தில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
என்ன சூழ்ச்சி செய்தாலும் எந்த அழுத்தத்திற்கும் நான் அடங்கிப் போக மாட்டேன்: த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
25 Jan 2026சென்னை, அழுத்தத்திற்கு அடங்கிப் போகும் ஆள் நான் இல்லை என்று த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ஊழல் செய்யவே மாட்டேன்.
-
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: கைப்பற்றிய பகுதிகளை திரும்பி தர ரஷ்யா மறுப்பு
25 Jan 2026அபுதாபி, அபுதாபியில் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலைியல் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யா திரும்பி தர மறுத்துள்ளதாக
-
உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும்: கனடா மக்களுக்கு பிரதமர் கோரிக்கை
25 Jan 2026ஒட்டவோ, அதிபர் ட்ரம்ப் வரி மிரட்டல் காரணமாக கனடா பொருட்களையே வாங்க நாட்டு மக்களுக்கு பிரதமர் கார்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்: பிரேமலதா விஜயகாந்த் தகவல்
25 Jan 2026திருச்செந்தூர், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் 2026 தேர்தல் நல்ல மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும் என்ற
-
த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் ராணி வேலுநாச்சியாரின் கதையை சொன்ன விஜய்
25 Jan 2026சென்னை, த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளை ஊக்கும்விக்கும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் ராணி வேலுநாச்சியார் பற்றி குட்டிக்கதை ஒன்று சொன்னார்.


