Idhayam Matrimony

சாலை விபத்தில் பா.ஜ.க. எம்.பி. பிரதீப் படுகாயம்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

அராரியா, ஜூலை12 - பீகாரில் நடந்த சாலை விபத்து ஒன்றில் பா.ஜ.க. எம்.பி.  பிரதீப்குமார் சிங் படுகாயம் அடைந்தார். பீகார் மாநிலம் அராரியா பாராளுமன்ற தொகுதியிலிருந்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதீப்குமார் சிங். 

இவர் அராரியா நகரில் உள்ள சாதர் மருத்துவ மனைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீடு  திரும்பிக்கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை இன்னொருவர் ஓட்டிச் செல்ல இவர் பின் சீட்டில் அமர்ந்து வந்தார்.

அப்போது சாலையின் குறுக்கே உள்ள ரோடு டிவைடரில் அந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில்  சென்ற எம்.பி.யும், அதை ஓட்டிச்சென்றவரும் கீழே  விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago