எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அர்ஜூன் - ஷாம் இணையும் 'ஒரு மெல்லிய கோடு'
அர்ஜூன் - ஷாம் இணையும் 'ஒரு மெல்லிய கோடு'
ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கும் புதிய படத்தில் அர்ஜூனும், ஷாமும் இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படத்துக்கு 'ஒரு மெல்லிய கோடு' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
'குப்பி', 'வனயுத்தம்' ஆகிய படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர், ரமேஷ் தன் அடுத்த படத்துக்கு 'ஒரு மெல்லிய கோடு' என்று டைட்டில் வைத்திருக்கிறார். அக்ஷயா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இதில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மனிஷாகொய்ராலா , ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். சேதுஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது பூந்தமல்லியில் தடயவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் அர்ஜுன் , ஷாம் , மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்துவருகின்றனர்.
''இது என் சினிமா கேரியரில் புதுசு.இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து அசை போட்டுக் கொள்ள இது போன்று ஒரு படத்தில் நடித்தோமே என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் படியான கதாபாத்திரம்'' என்று பெருமையாக கூறுகிறார் அர்ஜூன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


