எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை: நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முந்தைய தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்குள் நேரடியாக நுழைந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
இறுதிப்போட்டிக்கான முந்தைய சுற்றின் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஐ.பி.எல். 2015 முதலில் களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் 51 பந்துகளில் 65 ரன்கள், படேல் 25 பந்துகளில் 35 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.
இறுதியாக விளையாடிய அதிரடி பொல்லார்டு 17 பந்துகளில் 41 ரன்கள் என சென்னை அணியின் பந்து வீச்சை விளாசினார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. சென்னை அணி வெல்ல 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
பின்னர் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித் மற்றும் ஹஸ்ஸி களமிறங்கினர். முதல் ஓவரின் 4வது பந்திலேயே ஸ்மித் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இருப்பினும் ஹஸ்ஸியும் டூபிளெசிஸ்ஸும் சற்று நிலைத்து நின்றனர். 5.1வது ஓவரில் ஹஸ்ஸி 16 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். ரெய்னா தம் பங்குக்கு 25 ரன்களை எடுத்தார். சென்னை அணியின் கேப்டன் டோணி முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி சொதப்பினார். டூபிளெசிஸ்தான் நிலைத்து அதிகபட்சமாக் 45 ரன்களை எடுத்தார்.
பின் வரிசை வீரர்களில் பிராவோ 20, ஜடேஜா 19, அஸ்வின் 24 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினர். சென்னை அணி 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது. இந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி கூறியதாவது:
ஸ்மித்துக்கு கொடுக்கப்பட்ட எல்பிடபல்யூ முடிவு மிகவும் கொடூரமானது. இதைய எங்களால் மறக்கமுடியாது. 180 ரன்களுக்கு மேலான இலக்கை எடுப்பது எப்போதுமே கடினமானது தான். எங்களது பேட்டிங்கில் அதிரடி இல்லை. மென்மையான ஆட்டமே வெளிப்பட்டது. ஆட்டத்தின் நடுபகுதி வேகத்தை இழந்துவிட்டோம். முதல் 6 ஓவரில் விக்கெட்களை கைப்பற்ற முடியாமல் போனது ஆனாலும், பந்துவீச்சு மோசமில்லை. 180 ரன் வரை இந்த ஆடுகளத்தில் எடுக்கலாம். பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தை ராஞ்சியில் ஆடுகிறோம். நாங்கல் அங்கு அதிகமாக ஆடியது கிடையாது. சிறப்பாக விளையாட முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது: எங்களது தொடக்கம் சிற்பபாக இருந்தது. இதனால் மிகப்பெரிய ஸ்கோரை எட்டினோம். நாங்கள் தொடர்ந்து நேர்த்தியாக விளையாடி வருகிறோம். இறுதிப் போட்டியை கொல்கத்தாவில் ஆடுகிறோம். மும்பை மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவில் ஆடியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


