எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராம்சரண் – அல்லு அர்ஜுன் நடிக்கும் மகதீரா
ராம்சரண் – அல்லு அர்ஜுன் நடிக்கும் மகதீரா
ராம்சரண் – அல்லு அர்ஜுன் நடிக்கும் மகதீரா
A V V S நாயுடு வழங்க பத்ரகாளி பிலிம்ஸ் பத்ரகாளி பிரசாத் தயாரிக்கும் படம் மகதீரா தெலுங்கில்
ராம்சரண் – அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடித்து அமோக வெற்றி பெற்ற எவடு என்ற படமே தமிழில் மகதீரா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப் படுகிறது.
கதாநாயகிகளாக காஜல் அகர்வால், எமி ஜாக்சன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மற்றும் சாய்குமார், கிருஷ்ணமோகன், ஜெயசுதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - C.ராம்பிரசாத்
இசை - தேவிஸ்ரீ பிரசாத
பாடல்கள் - விவேகா, சினேகன், அருண்பாரதி, மீனாட்சி சுந்தரம
இயக்கம் - வம்சி பைடிப்பள்ளி
இணை தயாரிப்பு - வெங்கட்ராவ்
தயாரிப்பு - பத்ரகாளி பிரசாத். இவர் வம்பு, பத்ரா, காயத்ரி ஐ.பி.எஸ். பாட்ஷா படத்தை ஹிந்தியில் மொழி மாற்றம் உட்பட பல படங்களை தயாரித்தவர்.
வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் A.R.K.ராஜராஜா. இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார். அவரிடம் மகதீரா படம் பற்றி கேட்டோம்...
படு ஆக்ஷன் படம் இது. அல்லு அர்ஜுன் – காஜல் அகர்வால் இருவரும் காதலர்கள். காஜல் மீது தூத்துக்குடியில் உள்ள மிகப்பெரிய தாதாவுக்கும் காதல்.வில்லனிடமிருந்து தப்பிக்க நினைக்கும் இருவரும் தப்பியோடுகிறார்கள். வில்லன் அவர்களை மடக்கி பிடித்து காஜலை கொன்று விடுகிறார்கள். அல்லு அர்ஜுனை தீவைத்து கொளுத்தி விடுகிறார்கள்.அதிலிருந்து தப்பிக்கும் அல்லு அர்ஜுனின் முகம் முழுவதும் எரிந்து போய் விடுகிறது.டாக்டர்களின் முயற்சியால் ராம்சரணின் முகம் அல்லு அர்ஜுனுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப் படுகிறது.
தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய வில்லன் கூட்டத்தை எப்படி பழி தீர்க்கிறார் என்பது கதை ! படு ஆக்ஷன் படமாக மகதீரா உருவாகியுள்ளது என்றார் A.R.K.ராஜராஜா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |