எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறப்பாக விளையாடும் டி20 அணிகளை வைத்து நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் மொத்தம் 12 அணிகள் போட்டியிடும். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் உடனடியாக நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக சாம்பியன்ஸ் லீக் நிர்வாக கவுன்சில் முடிவெடுத்துள்ளது.
இந்த கவுன்சிலைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மூன்றும் இணைந்தே இந்த முடிவை ஒரு மனதாக எடுத்துள்ளது. தொடருக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் அனுர்ராக் தாக்கூர், இது கடினமான முடிவு. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விளையாடப்படும் டி20 போட்டிகளுக்கு சாம்பியன்ஸ் லீக் அர்த்தம் கொடுத்தது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


