எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாயில் பிளேடு வைத்து ஜீவாவை மிரட்டும் நயன்தாரா
வாயில் பிளேடு வைத்து ஜீவாவை மிரட்டும் நயன்தாரா
கடந்த 2006ம் ஆண்டு தீபாவளி அன்று ஜீவா, நயன்தாரா நடிப்பில் ‘ஈ’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
தற்போது அதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘திருநாள்’. இப்படத்திற்கு ஸ்ரீ இசையமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இத்திரைப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ளார். கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் ஜீவா ரௌடியாக நடித்திருக்கிறார். நயன்தாரா பேபி கிளாஸ் டீச்சராக நடித்திருக்கிறார். ரௌடியாக இருந்து ஒருவன் திருந்தும் போது ஏற்படும் இன்னல்களை படமாக இயக்கியிருக்கிறார்கள். ஜாலியான ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலரை தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டனர். இப்படத்தில் ஜீவாவை நயன்தாரா தன்னுடைய வாயில் பிளேடை வைத்து மிரட்டுவது போன்று காட்சியமைத்திருக்கிறார்களாம். இதில் நயன்தாரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


