எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.9 - நடிகர் அமிதாப்பச்சன் நடித்த ஆரக்ஷன் இந்தி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னைஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில் ஜி.ஜி. போட்டோ நிறுவனத்தின் இயக்குனரான சுசில் குப்தா, மதுகுப்தா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- பேஸ் இண்டஸ்டிரிஸ் குருப் நிறுவனத்தின் உரிமையாளர் பைரோஸ் நதியாத்வாலா, சினிமா தயாரிக்க எங்கள் நிறுவனத்திடம் பிலிம் ரோல்கள் வாங்கினர். இதன் மூலம் எங்களுக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் தர வேண்டும். இந்தப் பணத்தை படம் வெளியிடுவதற்கு முன்பு தருவதாக பைரோஸ் உத்தரவாதம் அளித்தார். இந்தியில் அமிதாப்பச்சன், தீபிகோபடுகோனே ஆகியோர் நடித்துள்ள ஆரக்ஷன் படத்தை பைரோஸ் தயாரித்துள்ளார். இந்த படத்தை ஆகஸ்ட் 12-ம் தேதி ரிலிஸ் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராமல், இந்த படத்தை வெளியிட்டால், எங்களுக்கு பைரோஸ் தரவேண்டிய பணத்தை திருப்பி தரமாட்டார்.
எனவே எங்கள் பணத்தை திருப்பி தராமல் ஆரக்ஷன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பெரிய கருப்பையா, மனுதாரருக்கு தரவேண்டிய ரூ.3 கோடியே 50 லட்சத்தை ஐகோர்ட் பதிவாளரிடம் ரொக்கமாகவோ அல்லது ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உத்தரவாதமாகவோ அளிக்க வேண்டும். அப்படி அளிக்க தவறும்பட்சத்தில் படத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


