எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய்,ஆக.10 - சிரியாவில் புரட்சியாளர்கள் மீது அரசு படையினரை ஏவி கொடூர தாக்கல் நடத்தி வருவதற்கு இதர அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிரியா அதிபர் பாஷர் அல் ஆசாத்திற்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
எகிப்து நாட்டில் புரட்சி ஏற்பட்டு அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனையடுத்து லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி நடத்தி வருகிறார்கள். அதிபர் கடாபி, பதவி விலக மறுத்து வருவதோடு போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறார். கடாபிக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் போரில் குதித்துள்ளன. அமெரிக்க கூட்டு படைகள் தாக்கியதில் கடாபியின் மகன் கொல்லப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிரியாவிலும் அதிபர் பஷருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் மீது சிரிய ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு அரபுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இருந்து தூதரை சவூதி அரேபியா திரும்ப பெற்றுக்கொண்டது. பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளின் தூதர்களும் சிரியாவில் இருந்து திரும்பப்பெறப்பட்டனர். சிரியாவில் நிலைமை மோசமாக இருக்கிறது என்று ஜோர்டான் நாடும் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கெல்லாம் அதிபர் பாஷர் அடிபணிவதாக தெரியவில்லை. ராணுவ அமைச்சர் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஆகியோர்களை அதிபர் பாஷர் நீக்கி இருப்பது போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது தாக்குதலை அதிகரிப்பதற்காகத்தான் என்று பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ராணுவ அமைச்சர் அலி ஹபிப் நீக்கப்பட்டுவிட்டு ஜெனரல் தாவூத் ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவம் தாக்கியதில் ஒரு நாளில் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாஷருக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


