Idhayam Matrimony

மழைநீர் சேமிப்பு திட்டம் இல்லையென்றால் அனுமதி இல்லை

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.19 - மழைநீர் சேமிப்பு திட்டத்தை அமுல்படுத்தாவிட்டால் கட்டிடம் கட்ட அனுமதியில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நேற்று சட்டபேரவையில் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனிசாமி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் கட்டிடம் கட்ட அனுமதி தரமுடியாத சூழ்நிலை ஏற்படும் என்றார். உடனடியாக முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசினார். அப்போது கூறியதாவது: மழைநீர் சேமிப்பு திட்டத்தை பற்றி அமைச்சர் குறிப்பிட்டார். 2011-2006 ம் ஆண்டு அதிமுக ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது புதிய கட்டிடம் கட்டும்போது மழைநீர் சேமிப்பு தொட்டி இருக்கவேண்டும் .அப்போது தான் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

2006- ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கைவிட்டு விட்டனர். இனிமேல் கட்டிடம் கட்டும் போது மழைநீர் சேமிப்பு தொட்டியின் வரை படம், அந்த கட்டிடம் கட்டும் வரைபடத்தில் காட்டவேண்டும்.  மழைநீர் வரைபடம் இல்லாத புதிய கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கப்படாது என்று அரசாணையும் பிறப்பிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago