எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஆக. 28 - தங்களுடைய சொந்த ஆதாயங்களுக்காக ஹசாரேயின் உயிரோடு விளையாடாதீர்கள் என்று ஹசாரேவுடன் உள்ள அவரது குழுவினருக்கு சிவசேனை தலைவர் பால்தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். உண்ணாவிரதத்தை கைவிடும் படி ஹசாரேவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்த பால்தாக்ரே, ஹசாரேயின் தோழர்களான கிரண்பேடி, அரவிந்த் கெஜ்ரிவால்,சிசோடியா ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார் தாக்கரே. கிரண்பேடிக்கும் மற்றவர்களுக்கும் அரசுடன் பிரச்சனை இருக்கிறது. இதற்காக அன்னா ஹசாரேயை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள். ஜன் லோக்பால் மசோதாதான் இவர்களுடைய இலட்சியம் என்றால் இவர்களும் அன்னாவோடு உண்ணாவிரதம் இருக்கவேண்டியதுதானே. கிரண்பேடி காவல்துறையின் மூத்த அதிகாரியாக இருந்தும் எந்த அரசும் அவரை டெல்லியின் போலீஸ் கமிஷனராக பதவியில் அமர்த்தவேயில்லை. இது ஏன் என்பதை அனைவரும் ஆராயவேண்டும். இனி அடுத்த 12 நாட்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி, சிசோடியா ஆகியோர் உண்ணாவிரதம் இருக்கட்டும். உண்ணாவிரதத்தால் உடல்படும் வேதனை எப்படிப்பட்டது என்பதை இவர்களும் உணரட்டும். ஒரு நாளைக்கு 6 வேளை சாப்பிட்டுக்கொண்டு ஊழலுக்கு எதிராக போராடுவதாக இவர்களும் கூறுவது அன்னாஹசாரேவுக்கு செய்யும் துரோகமாகும் என்று கூறியுள்ளார் பால்தாக்ரே.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


