முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரசாமியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஆக.- 31 - சுரங்க அனுமதி வழங்கியது, நிலம் ஒதுக்கீடு செய்தது போன்ற நடவடிக்கைகளில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி அவரது மனைவி ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை லோக் அயுக்தா நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதல்வர் குமாரசாமி, சுரங்க அனுமதி வழங்கியதிலும், நிலம் ஒதுக்கீடு செய்ததிலும் முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களை அடுத்து குமாரசாமி அவரது மனைவி அனிதா ஆகியோருக்கு எதிராக லோக் அயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு குமாரசாமி அவரது மனைவி அனிதா ஆகியோருக்கு கடந்த 8 ம் தேதி லோக் அயுக்தா சிறப்பு நீதிமன்ற நீதிபதி  என்.கே.சுதீந்திரராவ் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இவர்கள் இருவரும் தாங்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்ஜாமீன் கேட்டு லோக் அயுக்தா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி ராவ், இவர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் ஜன்தாக்கல் எண்டர்பிரைசஸ் என்ற சுரங்க நிறுவனத்தின் நிர்வாகிகளை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். விதிமுறைகளை மீறி ஜன்தாக்கல் எண்டர்பிரைசஸ் கம்பெனிக்கு குமாரசாமி சுரங்க அனுமதியை பெற்றுத்தந்துள்ளதாக கூறப்படுகிறது. குமாரசாமி முதல்வராக இருந்தபோது வீட்டு வசதி திட்டம் ஒன்றிற்கு நிலம் வழங்கியதில் முறைகேடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் குமாரசாமியின் மனைவிக்கு ஒரு குடியிருப்பு நிலம் அன்பளிப்பாக கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகள் தொடர்பாக வழக்கறிஞர் வினோத்குமார் என்பவர் லோக் அயுக்தா நீதிமன்றத்தில் தனிநபர் மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குமாரசாமிக்கும் அவரது மனைவிக்கும் முன்ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இவர்கள் இருவரும் லோக் அயுக்தா நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago