எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், செப். 8 - நான் இந்தியா வருவதற்கு மாயாவதி தமது சொந்த விமானத்தை அனுப்பி வைக்கட்டும் என்று உத்தரபிரதேச முதல்வர் மாயாவதித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியின் ஆடம்பரம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை குறித்து டெல்லி அமெரிக்க தூதரகம் தனது தலைமையகத்திற்கு அனுப்பிய செய்திகளை சமீபத்தில் விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் அம்பலமாக்கியது. இதில் ஒரு புதிய செருப்பு வாங்குவதற்காக மாயாவதி அரசு விமானத்தை மும்பைக்கு அனுப்பி வைத்தார் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதை மறுத்த மாயாவதி, அசாஞ்சிற்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை மன நல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும், வேண்டுமானால் அசாஞ்சை ஆக்ராவில் உள்ள மன நல காப்பகத்தில் சேர்க்க தயார் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அசாஞ்ச், மாயாவதி தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். மேலும் தான் கூறியதற்கு மன்னிப்பும் கேட்க வேண்டும். என்னை இந்தியாவுக்கு கொண்டுசெல்ல தனது தனி விமானத்தை மாயாவதி லண்டனுக்கு அனுப்பி வைக்கட்டும். நான் மிக அதிகமாக நேசிக்கும் இந்தியாவில் அரசியல் அடைக்கலம் பெறக்கூட தயார் என்றும், தான் லண்டனில் இருந்து மாயாவதிக்கு புதிய செருப்புகளை வாங்கி வரவும் தயார் என்றும் அசாஞ்ச் பதிலடு கொடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


