எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வுக் காலம் வந்தாலே இனம்புரியாத ஒரு பதட்டமும், பயமும் மாணவர்களுடைய மனதில் எழுந்து விடுகிறது. அந்தப் பதட்டம் தேவையில்லாதது. தேர்வு வாழ்வின் ஒரு பகுதிதான். அதுவே வாழ்க்கையல்ல. எனவே தேர்வு குறித்த பயத்தையும், மிரட்சியையும் முதலில் விரட்டுங்கள். கல்வியில் முழு கவனத்துடன் ஈடுபடுங்கள், அதே நேரத்தில் தோல்வியையும், வெற்றியையும் அமைதியான மனதுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் மனதில் கொள்ளுங்கள். !
தண்ணீர் குடியுங்கள் ! ஆச்சரியப்படாதீர்கள். தேர்வுக்கு முன் கொஞ்சம் தண்ணீர் குடிப்பதும், தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது அவ்வப்போது ஒவ்வொரு மிடறு தண்ணீர் குடிப்பதும் உங்கள் நினைவாற்றலையும், சிந்தனையையும் செவ்வனே வைத்திருக்கும் என்கின்றன ஆய்வுகள் ! அளவுடன் குடியுங்கள், இல்லையேல் பாத்ரூம் ஓட வேண்டிய அவஸ்தை வரலாம் ! படிக்கும் போதும் நிறைய தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் மூளையை அலர்ட் ஆக வைத்திருக்கும்.
முறையான பயிற்சி இல்லையேல் தேர்வுகள் பயத்தையும் பதட்டத்தையும் தரும். எனவே தயாராய் இருங்கள். அமெரிக்க ஜனாதிபதி வின்ஸ்டன் சர்ச்சில் மேடைப்பேச்சில் கில்லாடி. அதன் ரகசியம் என்ன என அவருடைய மகனிடம் கேட்டபோது சொன்னார், “அரை மணி நேரப் பேச்சுக்கு அப்பா பல மணி நேரம் பயிற்சி எடுப்பார் ! “. குழந்தைகள் மனதில் பதட்டத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளைப் படிக்க ஊக்குவிப்பது, அதற்கு உதவியாய் இருப்பது – இவற்றை மட்டுமே செய்யுங்கள். அவர்களை விரட்டி, பயமுறுத்தி, மிரட்டி தேர்வை ஒரு கொள்ளிவாய்ப் பிசாசு கணக்காக மிகைப்படுத்தாதீர்கள்.
தேர்வுக்குத் தயாராகும் கடைசி வாரத்தில் புதிதாய் எதையும் படிக்காமல் இருப்பது நல்லது. அதற்கு துவக்கத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாய்ப் படித்து வரவேண்டும். கடைசி கட்டத்தில் புதிதாய்ப் படிக்கும் போது தெரியாத பாடங்கள் பூதாகரமாய் வந்து மிரட்டும். தினமும் வகுப்பறைக்குச் சென்று அன்றன்றைய பாடங்களை அன்றே படிப்பவர்களுக்கு இந்த சிக்கல் வராது ! கடைசி தயாரிப்பு நாட்கள் படித்தவற்றைப் புரட்டிப் பார்க்கும் விதமாய் அமைவதே சிறப்பானது !
தேர்வு காலத்தில் அதிரடியான பழக்க வழக்க மாற்றங்களை உருவாக்காதீர்கள். இரவெல்லாம் கண்விழித்துப் படிப்பது. அல்லது வெகு சீக்கிரமே எழுந்து படிப்பது போன்றவற்றை புதிதாக முயலவேண்டாம். பழக்கமான கால அட்டவணையே சிறந்தது. கொஞ்சம் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் பெரிய அளவில் மாற்றம் இருந்தால் அது உடல்நலத்தைப் பாதிக்கும். நினைவாற்றலையும் மழுங்கடிக்கும் !
சிலர் தேர்வுக் காலத்தில் அறையை ஜெயில் போலப் பாவித்து அடைபட்டுக் கிடந்து படிப்பார்கள். அது உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கும். நல்ல சத்தான உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, வெளியே போய் வருவது என சகலமும் இருக்கட்டும் ! இவைதான் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஒரு தெளிவான அட்டவணை போட்டு அதன்படி படிப்பது உங்களுடைய படிப்பை நெறிப்படுத்தும். முக்கியமான விஷயங்களை படிக்காமல் தவறவிடும் சிக்கலையும் இது தவிர்க்கும்.
ஒரு நல்ல அமைதியான இடத்தைப் படிப்பதற்காய் தேர்ந்தெடுங்கள். டிவி ஓடிக்கொண்டிருந்தாலோ, அல்லது ரொம்ப சத்தமான இடத்திலோ படிக்க முடியாது. நல்ல அமைதியான அறை அவசியம். உங்கள் கவனத்தைச் சிதைக்கும் கதை புத்தகங்கள், கண்ணாடி, செல்போன் இத்யாதிகளெல்லாம் அந்த அறையில் இல்லாமல் இருப்பது நல்லது !
இணையம் ஒரு வரப்பிரசாதம். தேடித் தேடி எதையேனும் படிக்க வேண்டுமானாலும், சாம்பிள் கேள்வித்தாள்கள் வேண்டுமானாலும், விளக்கங்கள் தேவையென்றாலும் இணையம் கை கொடுக்கும். ஒரு வகையில் அது உங்களுக்கான லைப்ரரி. அதை சரியான விதத்தின் பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். தேர்வுக் காலத்தில் உங்கள் சமூக வலைத்தள வேலைகளையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். ஃபேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ் போன்ற சமாச்சாரங்களெல்லாம் உங்களை அறியாமலேயே உங்கள் நேரத்தையெல்லாம் விழுங்கி ஏப்பம் விடும்.
படுத்துக் கொண்டே படிப்பது, உருண்டு புரண்டு படிப்பதெல்லாம் படிப்பு வேகத்தைக் குறைக்கும். உங்களுக்கு தேவையற்ற சோர்வையும் கொண்டு வரும். நேராக அமர்ந்து படிப்பதே நல்லது. சோர்வாய் உணர்ந்தால் புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஒரு வாக்கிங் போய் வாருங்கள் ! படிக்கும்போது குறிப்புகள் எடுத்துப் படிக்க வேண்டும் என்பது பொதுவாகவே எல்லோரும் சொல்லும் அறிவுரை. எழுதும் போது உங்கள் மனதில் அது நன்றாகப் பதியும். கடைசியாக ஒருமுறை ஒரு வேக வாசிப்புக்கும் அது உதவியாகவும் இருக்கும்.
படிக்கும் போதே படிக்கும் பாடத்தில் எப்படிப்பட்ட கேள்விகள் வரலாம் என மனதுக்குள் ஒரு சிந்தனையை உருட்டுவது பலன் தரும். சின்னச் சின்ன கேள்விகளை அவ்வப்போது எழுப்பி பதில் சொல்லிக் கொண்டே இருப்பது உங்கள் நினைவில் நிறைய விஷயங்கள் பதிய உதவும். படிக்கும்போது வருடங்கள், இடங்கள், பெயர்கள் போன்றவற்றையெல்லாம் தனியே ஒரு இடத்தில் எழுதி வைத்து அடிக்கடி ரிவைஸ் செய்து கொள்வது பயனளிக்கும். நண்பர்களைச் சந்திக்கும் போதும் அவர்களிடமும் இதே கேள்விகளை அடிக்கடி கேளுங்கள். இருவர் மனதிலும் அவை பதிந்துவிடும்.
சிலர் முக்கியமாக சூத்திரங்கள், பெயர்கள் வருடங்கள் போன்றவற்றை சின்னச் சின்னப் பேப்பர்களில் எழுதி சுவரில் ஒட்டி வைத்து போகும் போதும் வரும் போதும் படிப்பதுண்டு. ஆசிரியர்களை மதியுங்கள். அவர்களை அன்பு செய்யுங்கள். எந்தெந்த பாடங்களை முதலில் படிக்கலாம் ? எந்தெந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என கேளுங்கள். அவர்களுடைய வாழ்த்தும் வழிகாட்டலும் நிச்சயம் உங்களை வெற்றியாளராக்கும்.
நண்பர்களோடு கலந்து படிப்பதும் நல்லதே. ஆனால் வெட்டிக் கதைகளும், அரட்டையுமாய் நேரம் வீணடிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் படித்தவற்றைப் பகிர்ந்து கொள்வதும், சந்தேகங்கள் தீர்த்துக் கொள்வதும் படிப்பை உற்சாகமாக்கும். மாதிரித் தேர்வுகளை அவ்வப்போது நடத்திப் பார்ப்பது ரொம்ப முக்கியம். அது உங்களை தேர்வுக்கு வலிமையாகத் தயாராக்கும். ஒரு சில மாதிரித் தேர்வுத் தாள்களை வைத்து முயற்சி செய்யுங்கள். மாதிரி வினாத்தாள்களிலுள்ள விதிமுறைகளை மிக மிகக் கவனமாகப் படியுங்கள். இவற்றை முதலிலேயே வாசித்துப் புரிந்து கொள்வது தேர்வு அறையில் விரைவாய் வாசிக்க உதவும்.
தேர்வு காலத்தில் பலரும் டீ, காபி போன்றவற்றை அதிகமாய்க் குடித்துத் தள்ளுவதுண்டு. அதைத் தவிர்த்து பழச்சாறு, பால் போன்றவற்றைக் குடிப்பது நல்ல பயன்தரும் என்கின்றனர் மருத்துவர்கள். உடலின் ஆரோக்கியம் படிப்புக்கும், தேர்வுக்கும் ரொம்ப அவசியம். உங்கள் நினைவாற்றலை வளர்க்க இதோ ஓர் மேஜிக் மருந்து. இதோ ஓர் ஆயுர்வேதிக் தைலம், இதோ ஒரு மாந்திரீகத் தகடு என்றெல்லாம் கடை விரிக்கும் அதிசயப் பிறவிகளிடமிருந்து தப்பி ஓடிவிடுங்கள். உங்கள் காசும், நேரமும் வீணாகுமே தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை.
அதிக குளிரான பொருட்களை தேர்வு நேரத்தில் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் சட்டென உங்களுக்கு ஜலதோஷமோ, காய்ச்சலோ, பல்வலியோ ஏதோ ஒரு சிக்கல் வந்து உங்களை படுத்தி எடுக்கலாம். எனவே அத்தகைய விஷப் பரீட்சைகளையெல்லாம், பரீட்சை முடிந்தபின் வைத்துக் கொள்ளுங்கள். பாசிடிவ் சிந்தனை மட்டுமே மனதில் இருக்கட்டும். தேர்வை நேர்மையாக அணுகுங்கள். எக்காரணம் கொண்டும் குறுக்கு வழியில் புகுந்து தேர்வை அணுக நினைக்காதீர்கள். நேர்மை தவறுபவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன் ?
பன்னிரண்டாம் வகுப்பு போன்ற தேர்வில் காப்பி அடித்தால் அந்த மாணவனுக்கு தேர்வில் நிரந்தரத் தடை விதிக்க தேர்வாணையம் முடிவு செய்திருக்கிறது. காப்பி அடித்து வாழ்க்கையையும், உங்கள் பண்பையும் அழித்து விடாதீர்கள். தன்னம்பிக்கை ரொம்ப அவசியம். தன்னம்பிக்கையோடு எதையும் அணுகுங்கள். அது நீங்கள் படிப்பவற்றை மனதில் நிறுத்தும். சிறப்பாகப் படிக்க உங்களைத் தூண்டும். தேவையற்ற டென்ஷனைத் துரத்தும் !
தேர்வைக் கண்டு பயப்படுவது உங்களை பலவீனராக்கும். அதே போல சிலர் தேர்வை வெறுப்பார்கள். அதுவும் அவர்களுடைய ஆற்றலையெல்லாம் வீணடித்துவிடும். அச்சமும், வெறுப்பும் இல்லாமல் இயல்பாக தேர்வை அணுகுங்கள். அதுவே சரியான வழி. சிலர் படிக்காத பாடங்களைப் பற்றிய கவலையிலேயே நேரத்தை வீணடிப்பார்கள். அந்த நேரத்தைப் படித்த பாடங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கச் செலவிடுங்கள். படிக்காத பாடங்கள் குறித்த கவலை படித்த பாடங்களையும் மறக்கடிக்கும்.
படிப்பதைப் புரிந்து படிக்க வேண்டியது அவசியம். தேர்வு என்பது மதிப்பெண்களுக்கானது மட்டுமல்ல. அறிவை வளர்த்தக் கூடியதுமாகும். எதைப் படிக்கிறோம் எனும் புரிதல் இல்லாமல் சும்மா மனப்பாடம் செய்வதில் பயனில்லை. அது விரைவில் மறந்தும் போகும் ! தேர்வுக்கு முந்தைய நாள் சீக்கிரமே தூங்குங்கள். குறைந்தது ஆறுமணி நேர தூக்கம் அவசியம். காலையில் வழக்கமான நேரத்தில் எழும்புங்கள். உடல் உற்சாகமாய் இருக்க வேண்டியது தேர்வு காலத்தின் முக்கியத் தேவை.
அரக்கப் பரக்க வியர்க்க விறுவிறுக்க தேர்வுக் கூடத்தை அடைந்தால் நீங்கள் படித்தவையும் மறந்து போகும். எனவே ஒரு அரைமணி நேரம் முன்னதாகவே தேர்வுக் கூடத்தை அடையும் படி திட்டமிடுங்கள். லேட்டாகக் கிளம்பி, ஆட்டோக்காரரைத் திட்டி, டிராபிக்கை சபித்து, டென்ஷனாகி படித்ததை கோட்டை விடாதீர்கள். ரொம்ப அடிப்படையான விஷயம். இருந்தாலும் சொல்கிறேன். ஹால்டிக்கெட், சில பென்சில்கள், சில பென்கள், ரப்பர் போன்றவற்றைத் தனியே ஒரு பாக்ஸில் போட்டு வையுங்கள். அதை தேர்வுக்கு முந்திய நாளே தயாராய் வைத்திருங்கள். ! நீங்கள் வகுப்பறையில் பயன்படுத்தும் பேனாவையே பயன்படுத்துங்கள். புதுப் பேனாக்கள் சும்மா வைத்திருங்கள், தேவைப்பட்டால் பயன்படுத்த !
தேர்வுத்தாளில் கேள்விகள் எந்தெந்த வகையில் வரும் என்பதைத் தெரிந்து வைத்திருங்கள். உதாரணமாக, ஒரு வரிக் கேள்விகள் எத்தனை, பெரிய கேள்விகள் எத்தனை என்பது போல. மாதிரி வினாத்தாள்கள் இந்த விஷயத்தில் உங்களுக்குப் பேருதவியாய் இருக்கும். எனவே அவற்றை ஒருமுறை புரட்டிப் பாருங்கள். மொத்தம் எத்தனை கேள்விகள் இருக்கின்றன, ஒரு கேள்விக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும். எதை முதலில் செய்தால் அதிக மதிப்பெண் கிடைக்கும் போன்றவற்றை மாதிரி வினாத்தாள்களின் உதவியுடன் பலமுறை பயிற்சி செய்து பாருங்கள். அது நிச்சயம் கைகொடுக்கும்.
தேர்வு அறைக்குள் நுழையும் போதும், அதற்கு முன்பும் மற்றவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், என்ன படித்துக் கொண்டிருக்கிறார்கள் என தகவல் சேகரிப்பது சிலருடைய வழக்கம். அது உங்களைக் குழப்பும். அடுத்தவர்கள் படித்ததும், படிக்காததும் உங்களுடைய தேர்வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. அந்த சிந்தனையே இல்லாமல் நீங்கள் படித்ததை மட்டும் நினைவில் வைத்திருங்கள் !
கேள்விகளை நன்றாக வாசிக்க வேண்டும் என்பது பாலபாடம். உங்களைக் குழப்பவேண்டுமென்றே கேள்விகளில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்திருக்க வாய்ப்பு நிறையவே உண்டு. எனவே கேள்விகளை ஒருமுறைக்கு இருமுறை வாசித்து உறுதி செய்து கொள்ளுங்கள். தேர்வு எழுதும்போது கூட உங்களுடைய கவனம் எல்லாம் உங்கள் கேள்வித் தாளிலும், விடைத்தாளிலும் மட்டுமே இருக்கட்டும். பக்கத்து இருக்கைக்காரன் இரண்டாவது பக்கம் எழுதிவிட்டானே, அடிஷனல் ஷீட் வாங்கி விட்டானே, ஏதோ படம் வரைகிறானே என பதட்டப் படாதீர்கள்.
தேர்வுத் தாளைத் திருத்துபவரை ஒரு முறை மனதில் நிறுத்துங்கள். முதல் கோணல் முற்றும் கோணலாகலாம். எனவே நன்றாகத் தெரிந்த விடையை முதலில் எழுதுவது சிறப்பானது. தெளிவாய் வினா எண்களோடு விடைகளை எழுதுவது, முக்கியமான பாயின்ட்களைக் கோடிடுவது, தேவையான இடங்களில் படங்கள் போடுவது எனும் ஆசிரியரின் அறிவுரைகள் இங்கே நினைவில் இருக்கட்டும்.
கணக்கு பாடம் எழுதும் போது எண்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு நாலும் ஏழும் ஒரே போல இருக்கும். சிலருக்கு ஏழும் ஒன்பதும் ஒரே மாதிரி போல இருக்கும். வேறு சிலருக்கு நாலும் ஒன்பதும் ஒரே மாதிரி இருக்கும். உடனே சரி செய்ய வேண்டிய சிக்கல் இது. இல்லையேல் நீங்கள் சரியாய் எழுதியிருந்தாலும் மார்க் கிடைக்காமல் போய்விடும்.
ஒரு நேரத்தில் ஒரு தேர்வு ! ஒரு தேர்வுக்குத் தயாராகும் போதோ, தேர்வு எழுதும் போதோ, அடுத்த தேர்வைக் குறித்த சிந்தனையில் இறங்காதீர்கள். அடுத்த தேர்வு எவ்வளவு கடினமாய் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அந்த சிந்தனையில் மூழ்கி இந்த தேர்வையும் வீணடிக்க வேண்டாம். தேர்வு நேரம் முடியும் வரை தேர்வு அறையை விட்டு வெளியே வராதீர்கள். எழுதி முடித்தபின் நேரம் கிடைத்தால் எழுதியதை மறுபடி ஒரு முறை வாசித்துப் பாருங்கள். உங்கள் விடைகளின் தரமும், மெருகும் கூடும் !
தேர்வு முடிந்தபின் அந்த தேர்வைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். கேள்வித் தாள்களையும் புத்தகத்தையும் புரட்டிப் புரட்டி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். அது அடுத்த தேர்வுக்கான தயாரிப்புகளைத் தாமதப்படுத்தும். உங்களை அழுத்தத்திலும் தள்ளிவிடலாம். எல்லா தேர்வுகளும் முடிந்தபின் ஆர அமர உட்கார்ந்து கூட்டிக் கழித்துப் பாருங்கள். தப்பில்லை !
கடைசியாக ஒன்று ! ! தேர்வு என்பதை இயல்பாக அணுகுங்கள். தேர்வு நாள் இன்னொரு நாளே. தேர்வில் வெற்றியோ தோல்வியோ எதுவும் இயல்பானதே. தோல்வி என்பது தூரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வெற்றி. அவ்வளவு தான். எனவே ரிலாக்ஸா இருங்க, எல்லாம் நன்மைக்கே !
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
11 Jul 2025வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.
11 Jul 2025விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்
11 Jul 2025புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
-
தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
11 Jul 2025சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவ
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஆடு, மாடுகள் முன் சீமான்: அமைச்சர் சிவசங்கர் வருத்தம்
11 Jul 2025அரியலூர் : ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
-
ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்
11 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
-
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு
11 Jul 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
ஜி-மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
11 Jul 2025வாஷிங்டன் : ஜி மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jul 2025சென்னை : தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பீகார் தேர்தலை 'திருட' பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
11 Jul 2025புவனேஸ்வர் : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பீகார் தேர்தலையும் திருட பா.ஜ.க. முயல்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
11 Jul 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்த பேசசுவார்த்தைககு அமெரிக்காவுககு இந்திய குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
-
தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை
11 Jul 2025சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
பாக்.கில் கிளர்ச்சியாளர்களால் பயணிகள் 9 பேர் சுட்டுக்கொலை
11 Jul 2025கராச்சி : பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
-
குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு
11 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
அழுத்தத்தைக் கையாள தோனியிடம் கற்றுக் கொண்டேன்: தீப்தி சர்மா
11 Jul 2025லண்டன் : அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
-
வெள்ளம், நிலச்சரிவு பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி
11 Jul 2025புதுடெல்லி : வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க
-
கீப்பராக துருவ் ஜுரெல்: பி..சி.சி.ஐ.
11 Jul 2025இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியான நபர் நிதீஷ் குமார் ரெட்டி : அனில் கும்ப்ளே புகழாரம்
11 Jul 2025லண்டன் : இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு தகுதியான நபர் என்பதை நிதீஷ் குமார் ரெட்டி நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ள
-
சிக்கிய அமெரிக்க கப்பலை மீட்டது இந்திய கடலோர பாதுகாப்பு படை
11 Jul 2025கிரேட் நிகோபார் : அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே நடுக்கடலில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த அமெரிக்க கப்பலை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக மீட்டனர்.
-
என்னை செதுக்கியவர்: கம்மின்சை புகழ்ந்த நிதீஷ் ரெட்டி
11 Jul 2025லண்டன் : இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக காம்பீர் பதில்
11 Jul 2025பெங்களூரு : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விராட் கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர் பதிலளித்துள்ளார்.
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகிறார் சுப்மன் கில்? - தேர்வு செய்ய பி.சி.சி.ஐ ஆர்வம்
11 Jul 2025புதுடெல்லி : இலங்கை, ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.