எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்கால்,
காரைக்கால் தருமபுரத்தில் இயங்கி வரும் எஸ்.ஆர்.வி.எஸ் நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.
வரும் 25ம் தேதி நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவையட்டி, காரைக்கால் தருமபுரத்தில் இயங்கி வரும் எஸ்.ஆர்.வி.எஸ் நேஷனல் மேல்நிலைப்பள்ளியில், நேற்று கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளித்தாளாளர் செல்லையன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கந்தசாமி, துணை முதல்வர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்து, கிறிஸ்துமஸ் விழா குறித்து உரையாற்றினர்.
தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் ஓரங்க நாடமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. கிருஸ்துமஸ் தாத்தா பள்ளி மழையர்கள் முன்பு ஆடி, பாடி கைகுலுக்கினார். நூற்றுக்கு மேற்பட்ட மழையர்கள் கிருஸ்துமஸ் தாத்தா முகமூடி அணிந்து பள்ளி வளாகத்தை வலம் வந்தனர். பின்னர், 3 ஆயிரம் பேருக்கும் தாளாளர் கிருஸ்துமஸ் கேக் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் இல்லத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பயன்படுத்தாத நல்ல நிலையில் உள்ள ஆடைகளையும், அன்பளிப்பு நிதியையும் வழங்கினர். அதனை காரைக்காலில் உள்ள பல்வேறு குழந்தைகள் காப்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக, காரைக்கால் குட்ஷெப்பர்டு ஆங்கிலப்பள்ளியில், பள்ளித்தாளாளர் ரான்சன்தாமஸ், முதல்வர் ஜாய்தாமஸ் தலைமையில், பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. அருட்தந்தை எடிசன் விழாவை தொடங்கி வைத்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து, ஏசு கிருஸ்து பிறப்பு நாடகம், நடனம், பாட்டு, பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட மழையர்கள் கிருஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விருந்தினர்களை கவர்ந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


