Idhayam Matrimony

தி.நகரில் உள்ள துணிக்கடையில் புடவைகளை திருடிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் கைது

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      சென்னை

சென்னை, தியாகராயநகர், உஸ்மான் சாலையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் யாரோ வாடிக்கையாளர் போல வந்து 16 புடவைகளை திருடிச் சென்றுவிட்டதாக, மேற்படி கடையின் மேலாளார் சேதுராமன் என்பவர் கடந்த 11.12.2016 அன்று மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாம்பலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மேற்படி துணிக்கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், 2 பெண்கள் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்ததும், மேற்படி கடையிலிருந்து புடவைகளை திருடியதும் தெரியவந்தது.மேற்படி ஆய்வின்போது பதிவான குற்றவாளிகளின் உருவத்தைக் கொண்டு, ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்றுமுன் தீனம் மாலை சுமார் 06.00 மணியளவில், மேற்படி குற்றவாளிகளின் உருவத்தை போன்ற 2 பெண்கள் மீண்டும் அதே துணிக்கடைக்கு வந்தபோது, மேலாளர் சந்தேகத்தின்பேரில், காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில், அங்கு வந்த காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சந்தேகப்படும்படி இருந்த அந்த 2 பெண்களை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். மேலும், பெண் ஊழியர்களைக் கொண்டு அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் 4 புடவைகளை உடலில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. புடவைகளை திருடிய மேற்படி 2 பெண்களை கைது செய்து, 4 புடவைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், பிடிபட்ட குற்றவாளிகள் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், சிலுகலூர்பேட்டையைச் சேர்ந்த துர்கா (57), க/பெ சரத்பாபு மற்றும் சுனிதா (45), க/பெ சந்திரன் என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 11.12.2016 அன்று இதே கடையில் 16 புடவைகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட துர்கா மற்றும் சுனிதா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago