முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் - அன்னப்பட்டி ஊராட்சியில் சமுதாயம் சார்ந்த அணுகுமுறை பயிற்சி

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம் :  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், சத்திரப்பட்டி அருகே உள்ள வேலூர்-அன்னப்பட்டி ஊராட்சியில் சமுதாயம் சார்ந்த அணுகுமுறை பயிற்சி ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் தலைமையில் நடைபெற்றது.

வேலூர்-அன்னப்பட்டி ஊராட்சி செயலர் (கிளர்க்) பி.முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் திறந்த வெளியில் மலம் கழித்தலினால் பரவும் நோய்கள் காரணமாக ஒவ்வொரு வருடமும் 5000 குழந்தைகள் நோய்வாய் பட்டு இறக்கின்றனர் என்று யுனிசெப் குழந்தைகள் நல அமைப்பு புள்ளி விபரம் அளிக்கின்றது. இதனால் திறந்த வெளியில் மலம் கழிக்கப்பட்ட ஊராட்சிகளை கண்காணிக்க கண்காணிப்பு குழக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் திறந்த வெளியில் மலம் கழிப்பதனால் மலேரியா, வாந்தி, பேதி மற்றும் வயிற்று போக்கினால் ஏராளமான குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்று  தூய்மை பாரத இயக்க ஒட்டன்சத்திரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆ.இளங்கோவன் பேசினார். முன்மை பயிற்றுனர்கள் ஏ.கார்த்தீஸ்வரி, எம்.சாந்தி ஆகியோர் செயல்முறையாக “பீ” பரவாமல் தடுப்பது எப்படி என்பதை  செயல்முறையாக செய்து காண்பித்தனர். இப்பயிற்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவர் இமாம் ஜாபர் , பணி மேற்பார்வையாளர் த.சகிலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் பணியாளர் கமலி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago