எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி வேணுகோபால சுவாமி திருக்கோயிலில் வரும் 8_ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
ஊட்டி நகரின் மையப்பகுதியில் புது அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடத்தப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விழா வரும் 8_ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.
வைகுண்ட வாசல் திறப்பு
விழாவினையொட்டி 7_ந் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து 8_ந் தேதி அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்கள் பாடி வழிபாடு நடத்தப்பட்டு 5.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பின்னர் காலை 10 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் ருக்குமணி, சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவ்விழாவில் பக்தகோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு திருமஞ்சணம் செய்ய பால், தயிர், இளநீர், அரிசி மாவு, திரவிய தூள், பன்னீர், சந்தனம் முதலிய அபிஷேக பொருள்களை வழங்க விரும்பும் பக்தர்கள் 7_ந் தேதி பகல் 12 மணிக்குள் திருக்கோயிலில் சேர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆண்டாள் கல்யாணம்
விழாவினைத் தொடர்ந்து வரும் 11_ந் தேதி மாலை 6.05 மணிக்கு கூடாரவல்லி முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் பொன்.சி.லோகநாதன், தலைமை அர்ச்சகர் விஸ்வநாத் ஆனந்த் மற்றும் விழா உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


