எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல்சூளை இயங்கி வருகின்றது.இதில் வெளிமாவட்டங்களிலிருந்து பல தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டம்,புதுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பவானி[35] என்பவர் அவருடைய மகள் மீனா[13] என்பவருடன் அந்த செங்கல் சூளையில் கடந்த 5 மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பொன்னேரி சாராட்சியர் தண்டபாணியிடம் தாயும்,மகளும் நேரடியாக வந்து புகார் அளித்தனர்.அந்த புகாரில் தாங்கள் இருவரும் அந்த சூளையில் பல வகைகளில் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும்,5 மாதமாக வேலை செய்ததற்க்கு இதுவரை கூலி கொடுக்கப்படவில்லை எனவும்,கூலி கேட்டதற்க்கு அங்கிருந்து அடித்து அறிவாள் மனையால் வெட்ட விரட்டியதாகவும் கூறினர்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட சாராட்சியர் உடனடியாக கோட்ட அளவிலான கொத்தடிமை ஒழிப்புக்குழுவுடன் நேரிடையாக அந்த செங்கல் சூளைக்கு சென்று விசாரித்தார்.அங்கு வேலை செய்த மேஸ்திரி மற்றும் தொழிலாளர்களிடம் பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தியபின் பவானியையும்,மீனாவையும் அங்கிருந்து பத்திரமாக மீட்டு சாராட்சியர் அலுவலகத்திற்க்கு அழைத்து வந்து முதல் கட்டமாக கொத்தடிமை மீட்பு நிவாரண நிதியிலிந்து 1000 ரூபாயினை வழங்கி,அவர்களை தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்து மறுநாள் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.மேலும் சம்பத்தப்பட்ட செங்கல் சூளை நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கினை கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது பொன்னேரி வட்டாட்சியர் செந்தில்நாதன்,சைல்டு லைன் பொருப்பாளர் நிர்மலா,வருவாய்துறை ஆய்வாளர்,கிராமநிர்வாக அலுவலர்,காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


