எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், வாசிப்பே மனித சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் பேராசிரியர் சோ மோகனா தெரிவித்தார்.
திண்டுக்கல் ஏ.பி.சி. பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் மன்றம் சார்பில் கணித மேதை இராமானுஜம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 4வது ஆண்டாக சிறப்பு கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 53 பள்ளிகளில் இருந்து 1234 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அன்றாட வாழ்வில் அறிவியல் என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகள் நடந்தது. முதல் 2 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதிக பள்ளி மாணவர்களை
பங்கேற்க செய்த அகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு பள்ளிக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மணிவண்ணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் சோ மோகனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், வாசிப்பே மனித சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் உலகைப்புரட்டி போட்ட புத்தகமான டார்வின் பரிணாம இயலைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார். தற்கால மாணவர்கள் படிப்போடு கூட பொது அறிவு நூல்களையும், விஞ்ஞான வளர்ச்சி குறித்து நூல்களையும் படித்து பயன்பெற வேண்டும் என்று பேசினார்.
அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, இயந்திரவியல் துறை விரிவுரையாளர் சதீஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


