எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பவானிசாகர் வனத்தில் மான் வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், இருசக்கர வாகனங்களில் மான் இறைச்சியுடன் வந்த 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பவானிசாகர் வனப் பகுதியான காடேபாளையத்தில் வனத் துறையினர் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் சோதனையிட்டபோது சாக்குப் பையில் மான் இறைச்சி கடத்திச் செல்வது தெரியவந்தது. அவர்களிடமிருந்த மான் தலை, கால், இறைச்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், ஒத்தபணங்காட்டைச் சேர்ந்த சாமிநாதன், மாரன் என தெரியவந்தது. மேலும், இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் வனத் துறையினரைக் கண்டதும் தப்பியோடினர். பிடிபட்டவர்கள் அளித்த தகவலின்படி, தப்பியோடியவர்களிடம் 30 கிலோ மான் இறைச்சி இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், ஒத்தபணங்காடு வனத்தில் சுருக்கு கம்பி வைத்து அதில் சிக்கிய 2 மான்களை கொன்று, அதன் இறைச்சியைக் கடத்தியதும், இதில், 7 பேர் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தப்பியோடியவர்களை வனத் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


