எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணைக்கிணங்க பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் ஆகியோர்கள் முன்னிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 1.08 கோடி செலவில் புதிதாக கட்டி முடிக்கபட்ட பொது கிட்டங்கி அறை, பணியாளர்கள் ஓய்வறை , உயர் மின்னழுத்த மின்மாற்றி மற்றும் அதிநவீன ஆவின் பாலகங்களை திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கன்னியாகுமரி கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் ஆகியோர்கள் முன்னிலையில், நாகர்கோவில், ஆவின் பாலக வளாகத்தில் ரூ. 32 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாதாம் உற்பத்தி பிரிவு மற்றும் பணியாளர்கள் ஓய்வறை கட்டிடங்களையும், ரூ. 15 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பொது கிட்டங்கி அறை, ரூ. 30 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயர்மின்னழுத்த மின்மாற்றி, வடசேரி, உழவர் சந்தையில் ரூ. 24 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தையும், குழித்துறை, வெட்டுமணி பகுதியில் ரூ. 7 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தையும் திறந்து வைத்து, பார்வையிட்டார். பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது தெரிவித்ததாவது:-
அம்மா 6-வது முறையாக பதவியேற்றவுடன், ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, முதல் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டு, அதனை உடனடியாக செயல்படுத்த ஆணையிட்டுள்ளார்கள். அதே போன்று, ஒவ்வொரு துறைகளின் வாயிலாக ஏழை, எளிய மக்கள் பயனடைய செய்யும்வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார்கள். அவ்வழியாக செயல்படும் தமிழக அரசு, இத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், அம்மா அவர்களின் நல்லாசியுடன், சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி, தமிழக அரசு பால்வளத்துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் அதிநவீன ஆவின் பாலகங்கள் திறப்புவிழா இன்று நடைபெற்றது.
அம்மா பால்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது, ஆவின்-ன் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் கருணை ஓய்வ+திய திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை அறிவித்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்கள்.
அம்மா எந்தவொரு செய்தாலும் அதில் முழு வெற்றி பெறுவார்கள். ஏனென்றால், ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு எது தேவை என்பதை, நன்றாக அறிந்து கொண்டு, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக உயர வழிவகை செய்துள்ளார்கள். குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு நோட் புத்தகங்கள், சீருடைகள், இலவச பேரூந்து பயணஅட்டை, மடிக்கணினிகள், மிதிவண்டிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம், அவர்களின் கல்வி உயர வழிவகை செய்துள்ளார்கள். மேலும், சுகாதாரதுறையின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், மகப்பேறு நிதியுதவி திட்டம், அம்மா குழந்தைகள் நலபரிசு பெட்டகம் போன்ற திட்டங்களின் மூலம், என்றும் மக்களின் பாதுகாவலனாக விளங்கிய, ஒரே முதலமைச்சர் அம்மா தான். பெண்களின் கல்வியை உயர்த்துவதற்காக சமூக நலத்துறையின் மூலம், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த தாலிக்கு 4 கிராம் தங்கம்; திட்டத்தை, மீண்டும் உயர்த்தி 8 கிரமாக வழங்க ஆணையிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், அனைத்து மக்களும் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் முழுவதுமாக பெற்று பயனடைய செய்கின்றவகையில், அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா மருந்தகம் போன்ற பல்வேறு திட்டங்களை, ஒவ்வொரு துறைகளின் வாயிலாக அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தியவர்; அம்மா
அம்மா ஜாதி, மதம் என்ற வேறுபாடில்லாமல், இஸ்லாமிய சகோதரர்களுக்கு நோன்பு நேரத்தில், பள்ளி வாசலுக்கு இலவச அரிசி, கிறிஸ்துவர்கள் புனித பயணமான ஜெருசேலம் செல்வதற்கு மானியம் போன்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக அரசு, அனைத்துத்துறைகளிலும் மிகபெரிய வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், பால்வளத்துறை அம்மா அவர்களின் நல்லாசியுடன், தமிழக அரசு எடுத்த பெரும்முயற்சியினால், அதிக லாபத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால், கறவை மாடு வழங்கும் திட்டத்தின்மூலம், ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளார்கள். ஆகவே ஆவின் பால் என்பது, தாய்ப்பாலுக்கு இணையானது. இதில், கலப்படம் எதுவுமில்லை. மிகவும் உண்மையான நம்பிக்கை வாய்ந்த ஒரே நிறுவனம் ஆவின் மட்டும்தான். கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆவின் ஒன்றியம் கடந்த 6 ஆண்டு காலமாக, தொடர்ந்து இலாபத்தில் செயல்பட்டு கொண்டு வருகிறது. குறிப்பாக 2015-16-ம் ஆண்டில் ரூ. 2.20 கோடி இலாபம் ஈட்டியுள்ளது. ஒன்றியம் மூலமாக சங்க உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கால்நடை தீவனம் கிலோ ஒன்றுக்கு மானியமாக ரூ. 4.00 வீதம் மாதம் ஒன்றுக்கு 70 டன் வழங்கப்படுகிறது. தாது உப்பு கலவை 50 சதவீதம் மானியத்தில் மாதம் ஒன்றுக்கு 1000 கிலோ வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றியத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக, சங்கங்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 80 காசுகள் வீதம் நிர்வாக செலவுகளுக்காக கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. மேலும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.00 வீதம் ஊக்கத்தொகையும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அம்மா ஆவின் மூலம் பணியாற்றி, ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கருணை ஓய்வ+தியம் திட்டத்தினை அறிவித்தார்கள். அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 பணியாளர்களுக்கு கருணை ஓய்வ+தியமாக ரூ. 2.40 இலட்சம் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் ஆவின் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ், 52 பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து, பின்னர் இதற்கு முன்பாக, 20 இலட்சம் லிட்டர் பால்உற்பத்தி இருந்தது. அம்மா அவர்களின் ஆட்சியில் 31 இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் வர்த்தா புயலின் போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து, பொதுமக்களுக்கு மிகவும் இடைய+றாக இருந்தது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஒரு சிறியளவிலான வாகனம் செல்ல முடியாத இடத்திலும், ஆவின் மூலம் பொதுமக்களுக்கு பால் விற்பனை சிறப்பாக செய்யப்பட்டது. இதுபோன்ற பல்வேறு நிலையங்களில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், என்றும் தமிழக அரசு, மக்களுக்காகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு அடையாளமாக இருக்கும். எனவே, எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில், பொதுமக்களாகிய நீங்கள் அ.இ.அ.தி.மு.க கட்சி வெற்றிபெற உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவுத்தலைவர் எம். சேவியர் மனோகரன், மாவட்ட பால்வளத்தலைவர் அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பகவதிபெருமாள், வழக்கறிஞர்கள் ஞானசேகரன், பால ஜனாதிபதி, துணை பதிவாளர் (பால்பளம்) கஸ்தூரிபாய், ஆவின் பொது மேலாளர் சுந்தரமகாலிங்கம், துணை பால் ஆணையாளர் சண்முக ராஜ்குமார், என்.என்.ஸ்ரீஐயப்பன், நாஞ்சில்சந்திரன், ரெஜிஸ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
கோவை பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
04 Nov 2025கோவை: கோவை பாலியல் வன்கொடுமை துப்பாக்கியால் சுடப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளிகளா? என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி.
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
ஐ.சி.சி. மகளிர் பேட்டிங் தரவரிசை: 10-ம் இடத்திற்கு முன்னேறினார் ஜெமிமா
04 Nov 2025துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா 814 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் ஸ
-
ஐதராபாத் அருகே சாலை விபத்து: 3 சகோதரிகள் பலியான சோகம்
04 Nov 2025தெலங்கானா: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஐதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உ
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
04 Nov 2025புதுடெல்லி: மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு குற்றச்சாட்டு
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
நடுவானில் திடீர் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
04 Nov 2025புதுடெல்லி: நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
ஆங்கில தேர்வில் தோல்வி: 7 ஆயிரம் லாரி டிரைவர்கள் பணிநீக்கம்
04 Nov 2025வாஷிங்டன்: ஆங்கில தேர்வில் தோல்வி அடைந்ததால் 7 ஆயிரம் லாரி டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
பொன்முடிக்கு மீண்டும் கட்சிப்பதவி: அ.தி.மு.க. கடும் விமர்சனம்
04 Nov 2025சென்னை: பொன்முடிக்கு மீண்டும் கட்சிப்பதவி வழங்கப்பட்ட நிலையில் அதுகுறித்து அ.தி.மு.க. கடும் விமர்சனம் செய்துள்ளது.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.


