Idhayam Matrimony

சத்தீஸ்கரில் கண்ணிவெடி வெடித்து 3 வீரர்கள் பலி

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

தண்டேவாடா, அக். 8 - சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் சக்திவாய்ந்த கண்ணிவெடியில் ஒரு மினி வாகனம் சிக்கியதில் அந்த வாகனம் தூள் தூளாக நொறுங்கி அதில் பயணம் செய்த 3 வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்கள் எஸ்.எஸ்.பி. பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள். மற்றொரு வீரர் இதில் காயமடைந்தார். இந்த கண்ணிவெடியை மாவோயிஸ்டுகள் வைத்திருந்ததாக நக்சல் தீவிரவாத ஒழிப்பு அதிகாரி ராம்நிவாஸ் தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் அட்டகாசம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணிவெடியில் சிக்கி நூற்றுக்கணக்கான வீரர்கள் பலியானார்கள். அந்த சம்பவம் முதல்கொண்டு தேடுதல் வேட்டை நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் தண்டேவாடா மாவட்டத்தில் இந்த அக்கிரமம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நக்சல் தீவிரவாதிகளை எப்படி ஒழித்துக் கட்டுவது என்பது தெரியாமல் சத்தீஸ்கர் அரசு திண்டாடி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago