எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு குளங்களிலிருந்து மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை இலவசமாக எடுக்க அனுமதி வழங்க 23.02.2017 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் எம்.ரவி குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பொது மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களின் சொந்த நோக்கத்திற்காகவும் விவசாய நிலங்களை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவும் அரசாணை எண் 233 (எம்.எம்.சி.2) தொழில்துறை நாள் 23.09.2015 இன் படி 1959 ஆம் வருடத்திய தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் விதி எண் 12 (2) இல் விகுத்துள்ள புதிய வழிமுறைகளின்படி,தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய் குளம் ஆகியவற்றில் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க தகுதி வாய்ந்த குளம் கண்மாய்களின் பட்டியல்கள் அனைத்து வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையிடமிருந்து பெறப்பட்டு 318 குளங்கள் கண்மாய்கள், மண் வண்டல் மண் சவுடு கிராவல்/ ஏனையவை எடுக்க தகுதி வாய்ந்தவை என அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. குளங்களின் பட்டியல் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.மேற்படி குளங்கள் கண்மாயிலிருந்து பொது மக்கள் விவசாயிகள், தங்களின் சொந்த உபயோகத்திற்காக விவசாய தேவைகளுக்காக 30 கன மீட்டர் (அதாவது 200 கன அடி கொள்ளளவு 5 லாரிகள்) அளவிற்கு எந்தவித் கட்டணமும் செலுத்தாமல் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுத்துக் கொள்ளலாம். இதற்கான அனுமதி வழங்கும் சிறப்பு முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 23.02.2017 காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.குளம் அமைந்துள்ள கிராமம் மற்றும் குளம் அமைந்துள்ள கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பட்டா மற்றும் கிராம கணக்குகள் பெற வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை குளத்திலிருந்து மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் இளநிலைப் பொறியாளரிடமும், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் இருந்து மண் எடுக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, ஒன்றியப் பொறியாளர் உதவிப் பொறியாளரிடமும் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலர்களும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 23.02.2017 அன்று முகாமின் போது கலந்து கொள்வார்கள். தாலுகா அலுவலகத்திலேயே பொதுமக்கள் விவசாயிகளுக்கு உடனுக்குடன் அனுமதி ஆணைகள் வழங்கப்படும். இந்த அனுமதி ஆணை 03.03.2017 வரை மட்டும் செல்லுபடியாகும்.பொதுமக்கள் விவசாயிகளுக்கு, மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். பொதுமக்கள் விவசாயிகளுக்கு, மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை இலவசமாக அதிகபட்சமாக 30 கன மீட்டர் (அதாவது 200 கன அடி 5 லாரி லோடு) வழங்கப்படும். குளம் கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் முற்றிலும் இல்லாத இடங்களில் மட்டும் துறையால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க வேண்டும்.குளம் கண்மாயின் இயற்கைத் தன்மை பாதிக்கப்படாமல் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டும் மண்/வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க வேண்டும்.குளம் கண்மாயில் மணல் இருப்பின் மணல் எடுக்க அனுமதி இல்லை. குளம் கண்மாயில் பொதுப்பணித்துறை ஊரக வளர்ச்சித் துறையால் குறிப்பிடப்பட்ட பகுதி தவிர வேறு இடத்தில் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க அனுமதி இல்லை. எனவே, பொதுமக்கள் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 23.02.2017 அன்று தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவைப்படும் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை இலவசமாக பெற்றுக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.