எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி
,திருநெல்வேலி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு தொடர்பாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூலம் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணைய உறுப்பினர்கள் ஸ்ரீனிவாசராகவன் , வழக்கறிஞர் ஆர்.ஜே.கார்த்திக், வழக்கறிஞர் ஜே.அசோக், வழக்கறிஞர் ஐ.பினாய்காஷ், வழக்கறிஞர் நவநீதராஜா ஆகியோர் இரண்டாம் நாளாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றப்பட்டுள்ளாத என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வழக்கறிஞர் ஆணையர் ஸ்ரீனிவாசராகவன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.க.குழந்தைவேல் முன்னிலையில் மேலப்பாளையம் மண்டலம் வுஎள நகர் பார்க் பகுதி, உதயா நகர் பார்க் பகுதி, என்.ஜி.ஓ காலனி பார்க் பகுதி வெங்கடாத்திரி நகர் பார்க் பகுதி, ராமலிங்க நகர் பார்க் பகுதி, எல்.கே.எஸ் நகர் பார்க் பகுதி, பிக்பஜார் எதிர்புரம், மேல குலவணிகபுரம் தோப்பு புறம்போக்கு பகுதி, ஒச்சான்குளம் இரயில்வே பீடர் ரோடு ஆகிய பகுதிகளில் சீமை கருவேல மரம் வேருடன் அகற்றப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். மேலும் ராஜகோபாலபுரம் குளம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை பார்வையிட்ட குழுவினர் உடன் அகற்றிட நடவடிக்கை எடுக்க அறிவுருத்தினர் மேலும் சீமை கருவேல மரங்கள் உள்ள தனியார் நிலங்களிலும் உடனடியாக அகற்றிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.இந்த ஆய்வின் போது பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் சிவகுமார், உதவி பொறியாளர்கள் ஆதிமூலம், ரமேஷ், உதவி ஆணையர் சுப்புலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, பாஸ்கர், திருநெல்வேலி வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் பாலசந்திரன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


