எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில், 45,098 விவசாயிகள் வறட்சி நிவாரணம் பெறத் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.திருவேங்கடம் வட்டம், காரிச்சாத்தான் அருகே பாறைப்பட்டியில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் தலைமை வகித்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பேசியதாவது-இந்த ஆண்டு வறட்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் ஏறத்தாழ 45,098 விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு, நிவாரணம் பெற தகுதி பெற்றவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 52 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் நிவாரணம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வறட்சியினால் கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.2016-2017 இல் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 6,218 பேர் பயனடைந்துள்ளனர். வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.25 லட்சம் மானியத்துடன் ரூ. 1 கோடி கடன் வழங்கப்படும். விரைவில் ஸ்மார்ட் அட்டை வழங்கப்படவுள்ளது என்று தெரிவித்தார் .முகாமில், 20 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 20 பேருக்கு பட்டா மாறுதல் ஆகியவற்றுக்கான உத்தரவு நகலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.இதில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கனகராஜ்,திருவேங்கடம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் ஜெம்ஸ்வெள்ளத்துரை, குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


